‛வாட்ஸ்அப்' அப்செட்; சில நிமிடங்களில் சீரானது
மாற்றம் செய்த நாள்
03நவ2017
15:15
பதிவு செய்த நாள்
நவ 03,2017 14:34
நவ 03,2017 14:34
சென்னை: தற்போது மக்களோடு ஒன்றிப்போன ‛வாட்ஸ் அப்' செயலி சில நிமிடம் செயலற்று போனதால் பயன்பாட்டாளர்கள் உலகம் முழுதும் அதிர்ச்சியுற்றனர்.
சமூக வலைதளமான ‛வாட்ஸ் அப்' செயலியை உலகம் முழுதும் பல கோடிகணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறுஞ்செய்திகள் , புகைப்படங்கள், வீடியோக்களை பகிரவும் இதனை பயன்படுத்தினர். ஆபத்து காலங்களில் இந்த செயலி மக்களுக்கு பெரிதும் உதவியது. இந்நிலையில் மதியம் ( 2. 05 மணி முதல் 2.36 வரை ) சில மணி நேரமாக வாட்ஸ் அப் செயலி திடீரென முடங்கியது.

இதற்கான காரணம் குறித்து உடனடியாக தெரியா விட்டாலும், தொழில்நுட்ப கோளாறாக இருக்கலாம் என கூறப்பட்டது . வாட்ஸ் அப் செயலிழந்ததால் பயன்பாட்டாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
ஏறக்குறைய 30 நிமிடத்தில் இந்த சேவை மீண்டும் துவங்கியது. காரணம் இதுவரை உறுதியாக தெரியவில்லை. திடீர் ஸ்தம்பிப்பால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment