முடிச்சூருக்கு பேரிடர் மீட்பு குழு விரைவு
பதிவு செய்த நாள்03நவ
2017
09:51
சென்னை: சென்னையில் விடிய விடிய கனமழை பெய்தது. இதில் முடிச்சூர் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இப்பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட மாநில பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர்.
மாநில வருவாய் ஆணையர் சத்யகோபால் நிருபர்களிடம் கூறுகையில்; மின்சாரம் துண்டிக்கப்பட்ட 112 இடங்களில் தண்ணீர் வடிய துவங்கியதை அடுத்து, மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் வழங்கப்படும். முடிச்சூர் பகுதிக்கு மாநில பேரிடர் மீட்பு குழு விரைந்துள்ளது. என்றும் தெரிவித்தார்.
14 சுரங்கபாதையில் பாதிப்பு இல்லை:
கெங்கிரெட்டி சுரங்க பாதையை ஆய்வு செய்த பின்னர் மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் கூறியதாவது:
சென்னையில் நேற்று பெய்த கனமழையில் கழிவுநீர் மற்றும் மழைநீர் கலந்து தி.நகர் சாலையில் தேங்கியுள்ளது. படம்.சுரேஷ்கண்ணன்.
16 சுரங்க பாதைகளில் 14 சுரங்க பாதைகளில் பாதிப்பு இல்லை. கணேசபுரம் கெங்குரெட்டி சுரங்கபாதையில் மட்டும் தண்ணீர் தேங்கியுள்ளது. இங்கு 45 நிமிடங்களில் தண்ணீர் வெளியேற்றப்படும். பள்ளிக்கரணை, வேளச்சேரி, ஆதம்பாக்கம், பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.தொடர் மழை பெய்வதால் தண்ணீர் தேங்குவதை தடுக்க முடியாது. நிவாரண முகாம்களில் 200 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment