Friday, November 10, 2017

ஓட்டுநர் இல்லாமல் 13 கி.மீட்டர் ஓடிய ரயில் என்ஜின்: அதிருஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்ப்பு



ஓட்டுநர் இல்லாமல் ரயில் என்ஜின் 13 கி.மீட்டர் ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நவம்பர் 09, 2017, 04:52 PM
கல்பர்கி,

கர்நாடக மாநிலம் வடி ரயில் நிலையத்தில், நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரயில் என்ஜின், ஓட்டுநர் இல்லாமல் 13 கி.மீட்டர் தானாக ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- “கர்நாடக மாநிலம் கல்பர்கி மாவட்டத்தில் வடி ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்திற்கு, நேற்று பிற்பகல் 3 மணியளவில் சென்னை-மும்பை செல்லும் ரயில் வந்தது. வடி ரயில் நிலையத்தில் ரயிலின் எலக்ட்ரிக் என்ஜின் அகற்றப்பட்டு டீசல் என்ஜின் இணைக்கப்பட்டது. வடி ரயில் நிலைய சந்திப்பில் இருந்து சோலாப்பூர் ரயில் நிலையம் வரையிலான பாதை மின்சாரமயமாக்கப்படாததால், டீசல் என்ஜின் இணைக்கப்பட்டது. இதையடுத்து, ரயில் சோலாப்பூருக்கு பயணம் மேற்கொள்ள ஆரம்பித்தது.

இதற்கிடையில், எதிர்பாராத விதமாக, தனியாக நிறுத்தப்பட்டு இருந்த எலக்ட்ரிக் ரயில் என்ஜின் தானாக ஓடத்துவங்கியது. இதை எதிர்பாராத ரயில்வே அதிகாரிகள், ரயிலை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக விபத்து ஏற்படாமல் இருக்க என்ஜின் தானாக ஓடிய ரயில் பாதையில் சிக்னல்கள் ஒழுங்குபடுத்தப்பட்டது. அடுத்தடுத்து இருந்த ரயில் நிலையங்களும் உஷார் படுத்தப்பட்டன.

ரயில்வே அதிகாரி ஒருவர் தானாக ஓடிய என்ஜினை மோட்டார் சைக்கிள் மூலமாக ரயிலை துரத்தினார். ஒருவழியாக என்ஜின் வேகமும் குறைய துவங்கியதால் ஓட்டுநர் தாவிப்பிடித்து, என்ஜினை நிறுத்தினார். சினிமா காட்சிகள் போன்று நடைபெற்ற இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓட்டுநர் இல்லாமல் ரயில் 13 கி.மீட்டர் ஓடியதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், ரயில் என்ஜின் தானாக எப்படி இயங்க ஆரம்பித்து ஓடத்துவங்கியது என்ற விவரம் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Guv welcomed with ‘Dravida nal thirunadu’ posters

Guv welcomed with ‘Dravida nal thirunadu’ posters  TIMES NEWS NETWORK 24.10.2024 Dindigul : Tamil Nadu governor R N Ravi awarded  degrees to...