போலி டாக்டர்கள் மீது கொலை முயற்சி வழக்கு
Added : நவ 18, 2017 21:29
கிருஷ்ணகிரி:''போலி டாக்டர்கள் மீது, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்படும்,'' என, தமிழக சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன் கூறினார்.
கிருஷ்ணகிரியில் உள்ள, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், தமிழக சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன், நேற்று ஆய்வு செய்தார்.பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:தமிழகம் முழுவதும், அக்., வரை, 17 ஆயிரம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். இதில், 52 பேர் மட்டுமே இறந்துள்ளனர். அரசின் துரித நடவடிக்கையாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பாலும், காய்ச்சல் பரவுவது கட்டுக்குள் வந்துள்ளது.
போலி டாக்டர்களை கண்டுபிடித்து கைது செய்யும் போது, அவர்கள், எளிதில் நீதிமன்றத்தில் ஜாமின் பெற்று, மீண்டும் அதே இடத்தில் கிளினிக் வைத்து, நோயாளிகளுக்கு சிகிச்சை செய்கின்றனர். இவ்வாறு, சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் போலி டாக்டர்கள் மீது, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்படும். இதனால், அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினர்.
No comments:
Post a Comment