அடுத்து என்ன..? மழை குறித்து `தமிழ்நாடு வெதர்மேன்' அப்டேட் இதுதான்!
ர.பரத் ராஜ்
கடந்த 27-ம் தேதி தொடங்கியது வடகிழக்குப் பருவமழை. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த மூன்று நாள்களாக மழை வெளுத்து வாங்கிவருகிறது. சென்னையில் வியாழன் மாலை 5 மணிக்கு மேல் பெய்யத்தொடங்கிய மழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. அதனால், போக்குவரத்து முடங்கியது. சென்னையில் 122 இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மழையில் சிக்கித் தவித்த மக்களை மின்வெட்டும் வாட்டி வதைத்தது. மாநகரப் பேருந்து போக்குவரத்தில் தொய்வு ஏற்பட்டதால், ரயில்களும் நிரம்பி வழிந்தன. தண்டவாளங்களில் மழைநீர் தேங்கி நின்றதால் ரயில்கள் மெதுவாகவே இயக்கப்பட்டன. மேலும், மெட்ரோ ரயில்களில் நேற்றும், இன்றும் வழக்கத்துக்கு அதிகமான கூட்டம் இருந்தது. இந்நிலையில், மழை குறித்தான அப்டேட்டை `தமிழ்நாடு வெதர்மேன்' அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், `தொடர்ச்சியாக சென்னை நகரில் பெய்துவந்த மழை தற்போது ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. மழை தற்போது, நகரின் வெளியே நகரும். குறிப்பாக, அதிகாலையில் நல்ல மழை இருக்க வாய்ப்புள்ளது. முக்கியமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது. டெல்டா பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. புதுச்சேரி மற்றும் கடலூரிலும் சீக்கிரமே நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.
#ChennaiRains

No comments:
Post a Comment