'ஸ்கிம்மர்' கருவியை பொருத்தி ஏ.டி.எம்.,மில் பணம் திருட முயற்சி
குமரன் நகர், நவ. 12-ஏ.டி.எம்., மையத்தில், 'ஸ்கிம்மர்' கருவியை பொருத்தி, வங்கி வாடிக்கையாளர்களின் ரகசிய தகவல்களை திருடி பணம் கொள்ளை அடிக்க முயற்சி நடந்துள்ளது.சென்னை, மேற்கு மாம்பலம், கோவிந்தன் சாலையில், கனரா வங்கியின், ஏ.டி.எம்., மையம் அமைந்துள்ளது.சிறிய கேமராநேற்று மாலை, இந்த, ஏ.டி.எம்.,மில் பணம் நிரப்ப, வங்கி ஊழியர்கள் சென்றனர். அப்போது, ஏ.டி.எம்.,மில் ஸ்வைப் செய்யும் கருவியுடன், 'ஸ்கிம்மர்' கருவி பொருத்தப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த ஸ்கிம்மர் எனும் கருவியை, ஏ.டி.எம்., கார்டு ஸ்வைப் செய்யும் கருவியுடன் இணைத்து, ரகசிய எண் பதிவு செய்யும் இடத்தில் சிறிய கேமராவை பொருத்தும் மர்ம நபர்கள், வாடிக்கையாளரின் தகவல்களை திருடி, ஏ.டி.எம்., கார்டுகளை க்ளோனிங் செய்து, பணம் திருடி வருகின்றனர்.சம்பவ இடத்திற்கு வந்த வங்கி மேலாளர், ஸ்கிம்மர் கருவி மற்றும் ரகசிய எண் தெரிய, ஏ.டி.எம்.,மில் பொருத்தப்பட்டிருந்த கேமராவை பறிமுதல் செய்து, குமரன் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.இது குறித்து வழக்கு பதிந்த போலீசார், ஏ.டி.எம்.,மில் ஸ்கிம்மர் கருவியை பொருத்திய மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.சிக்கல்ஏ.டி.எம்.,மில் இருந்த மூன்று கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்ததில், அவை பழுதடைந்துள்ளதால், ஸ்கிம்மர் பொருத்திய, மர்ம நபர்கள் கண்டுபிடிப்பதில் சிக்கல் நிலவி வருகிறது.மேலும், வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டுள்ளதா எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment