Sunday, November 12, 2017

மூன்றாவது நாளாக தொடர்ந்த ரெய்டு: கடுப்பில் காவல்துறை

மூன்றாவது நாளாக தொடர்ந்த ரெய்டு: கடுப்பில் காவல்துறை
தமிழகத்தில் மூன்றாவது நாளாக தொடரும், ஐ.டி ரெய்டால் காவல்துறையினர் கடுப்பில் உள்ளனர்.
சசிகலா, தினகரன் குடும்பம் மற்றும் சம்பந்தப்பட்டவர்களிடம், இன்று மூன்றாவது நாளாக ரெய்டு தொடர்ந்து நடந்து வருகிறது. 187 இடங்களில் தொடங்கிய ரெய்டு, தற்போது 40 இடங்களில் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், கர்சன் எஸ்டேட்டில் இன்று தொடர்ந்து சோதனை நடைபெற்றது. குறிப்பாக, கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
அதேபோல கோவையில், தொழிலதிபர்கள் ஆறுமுகசாமி, சஜீவன் சம்பந்தப்பட்ட இடங்களில் இன்று தொடர்ந்து ரெய்டு நடைபெற்றது. அவிநாசி சாலையில் உள்ள ஆறுமுகசாமிக்கு சொந்தமான வணிக வளாகத்திலும், போத்தனூரில் உள்ள சஜீவன் வீட்டிலும் ரெய்டு நடைபெற்றது.
இந்த ரெய்டால் சம்பந்தப்பட்டவர்கள் எரிச்சல் ஆவது இயல்புதான். ஆனால், காவல்துறையையும், இந்த ரெய்டு கடுப்பேற்றியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக, போலீஸ் பாதுகாப்புடன்தான் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. இதனால், சில காக்கி சட்டைகள் கடுப்பில் உள்ளனர்.
கோவையில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸில் சிலர் நம்மிடையே, "நல்லா சாப்பிட்டு, நிம்மதியா தூங்கி மூணு நாள் ஆகுது. இந்த ரெய்டு நாள எதுவுமே பண்ண முடியல. சீக்கரம் முடிஞ்சா பரவாயில்ல" என்றனர் கடுப்பாக.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024