Wednesday, November 22, 2017

மைத்ரேயன் போர்க்கொடியின் பின்னணி என்ன? :
அ.தி.மு.க.,வை அசரடிக்க போகும் அதிரடிகள்


அ.தி.மு.க.,வுக்குள் எழுந்துள்ள கலகக்குரலின் பின்னணியில், இரட்டை இலைச் சின்னம் குறித்த தீர்ப்பு மட்டுமல்லாது, டில்லியில் உருவாகிவரும் கடும் அதிருப்தியும் இருப்பதாக தெரியவந்துள்ளதால், இனி வரும் நாட்களில், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.



அ.தி.மு.க.,வின் இரு அணிகளும் இணைய முயற்சிகள் மேற்கொண்டபோது, அதில் தீவிரமாக ஆர்வம் காட்டியது பழனிசாமி தானே தவிர, பன்னீர் அல்ல. உள்ளாட்சித் தேர்தல், முடங்கிய சின்னம் மீட்கப்பட வேண்டிய கட்டாயம் ஆகியவற்றின் காரணமாக, பன்னீர் அணியுடன் இணைவதில், முதல்வர் தரப்பு, அதிக ஆர்வம் காட்டியது.

'பன்னீரும், நானும் இரட்டைக் குழல் துப்பாக்கி' என்கிறார் முதல்வர். ஆனால், துப்பாக்கியின், 'டிரிக்கரில்' யார் கை உள்ளது என்பதே முக்கியம். ஆட்சிக்கு, பழனிசாமி; கட்சிக்கு பன்னீர். இதுதான் உடன்பாடு. ஆட்சியை முழு சுதந்திரத்துடன், பழனிசாமி நடத்துவதைப் போல, கட்சியை பன்னீர் வழிநடத்த வாய்ப்பில்லை.

வாக்குறுதிப்படி, இணைப்புக்கு முன்பே, பன்னீர் அணி சார்பில் ஐந்து பேர், பழனிசாமி அணி சார்பில், ஆறு பேர் அடங்கிய வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
திங்கள ன்று அணி இணைப்பு. அதற்கு முந்தைய நாள் ஞாயிறு ஆலோசனை. அப்போது, 'வரும் வியாழன்று வழிகாட்டும் குழு' என உத்தர வாதம்அளித்தனர்.

12 வியாழன்கள் ஓடி விட்டனவே தவிர, ஒரு குழுவும் இதுவரை அமைக்கப்படவில்லை.

அணிகள் இணைந்து, மூன்று மாதங்களாகியும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப் பாளர், இரு துணை ஒருங்கிணைப்பாளர்கள் என நான்கு பேரும், ஒருமுறைகூட கூடி ஆலோசனை நடத்தவில்லை. ஆட்சி நகர்ந்து கொண்டிருக்கிறதே தவிர, கட்சி பணிகள் ஸ்தம்பித்து நிற்கின்றன. இணைப்பால், பழனிசாமி அணிக்கே லாபம்.

தர்மயுத்த அணியில், பன்னீர், பாண்டியராஜனை தவிர, கூட இருந்த தளபதிகளுக்கு, 'தம்படி' பயன் கூட கிடைக்கவில்லை. இதுபற்றி கேட்கும் போதெல்லாம், ' சின்னம்வரட்டும்; சரிசெய்யலாம்' என்று தான், பதில் கிடைத்தது. இங்கு தான் சிக்கல். சின்னம் கிடைத்தாலுமே, மறு நிமிடம் சசி அணி நீதிமன்றத்திற்கு போவது நிச்சயம்.பின், வழக்கு, விசாரணை என நீளும்.அதுவரையில் தர்மயுத்த தளபதிகளின் நிலை, பரிதாபம் தான்.

'நம்மால் நீடிக்கும் இந்த ஆட்சியில், நமக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. 'தனக்கு மட்டும் பதவி போதுமென, பன்னீரும், எம்.எல்.ஏ.,க்களை சரிகட்டினால் மட்டும் போதுமென முதல்வரும் கருதுகின்றனர்' என, குமுறுகின்றனர், தளபதிகள். சின்னம் கிடைத்தாலும் கூட, பழனிசாமி அணிதான் முன்னணியில் நிற்குமே தவிர, தர்மயுத்த தளபதிகள் தள்ளித்தான் நிற்க நேரிடும். அதனால் தான், சில நாட்களில், இரட்டை இலை தீர்ப்பு வரப் போவது தெரிந்ததும், முன்கூட்டியே முஷ்டியை உயர்த்தியுள்ளார், மைத்ரேயன்.

அவர், தன் முகநுால் பக்கத்தில், 'ஓ.பி.எஸ்., - ஈ.பி.எஸ்., அணி இணைந்து, இன்றோடு மூன்று மாதங்கள் நிறைவுற்று, நான்காவது மாதம் துவங்குகிறது. மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?' என, கேள்வி எழுப்பியுள்ளார். அவரது கருத்து, கட்சியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, மைத்ரேயன் கூறுகையில்,' 'தொண்டர்களின் உள்ளக்குமுறலை, திருக்குறள்

போல் பதிவு செய்துள்ளேன்.அதற்கு, பலர் விளக்க உரை எழுதுவர்,'' என்றார். அவரது கருத்துக்கு, பன்னீர் ஆதரவாளர்களிடம், பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.பிரதமர் மற்றும், பா.ஜ., தலைவர் களிடையே, தனி செல்வாக்குடையவர் மைத்ரேயன். சமீபத்திய வருமான வரித்துறை சோதனை களின் மறைமுக கரங்களில் இவரும் உள்ளார். இவர் மூலம்,இத்தகைய வெடி பற்ற வைத்திருப்பதற்கு பின்னணி உள்ளது.'

இணைந்து, கட்சி கட்ட மைப்பை பலமாக்கி,எதிர்கால கூட்டணிக்கு ஏதுவாக, விரைந்து மாறுங்கள் என, கூறினோம். 'அந்த நம்பிக்கைக்கு விரோதமாக செயல்பட் டால்,அடுத்த லோக்சபா தேர்தலில் எந்த பயனும் கிடைக்கபோவது இல்லை; பூனைக்கு மணி கட்டுங்கள்' என, டில்லி பிறப்பித்த உத்தரவின் வெளிப்பாடே, மைத்ரேயனின் போர்க்கொடி என்கின்றன, அரசியல் வட்டாரங்கள்.

கட்சிக்குள் நீருபூத்த நெருப்பாக தகிக்கும் குமுறல்கள், கவனத்திற்கு வந்துள்ளதால், வீசப்போகும் பெரும் புயலை உணர்த்தும் விதமாக, மைத்ரேயன் மூலம், புயல் எச்சரிக்கை கூண்டை, டில்லி ஏற்றியுள்ளது. கட்சியில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. ஒருமித்த கருத்துடன், ஒற்றுமை உணர்வோடு, அனைவரும் இணைந்து செயல்படுகிறோம். அனைவரும் ஒன்று சேர்ந்து, அ.தி.மு.க., மற்றும் அரசு என்ற தேரை இழுத்து செல்கிறோம். இதில், கருத்து வேறுபாடுக்கு இடமில்லை.

-ஜெயகுமார், மீன்வளத் துறை அமைச்சர், அ.தி.மு.க.,

மைத்ரேயன் மனதில் நிலநடுக்கம் ஏற்பட்டு விட்டது. அந்த நிலநடுக்கம், இன்று, 6.5 ரிக்டரில் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் தொடரும். அங்குள்ள எல்லாரது மனதிலும், இப்படிப்பட்ட செய்தி வரும்.

-சம்பத்,தினகரன் ஆதரவு பேச்சாளர்

No comments:

Post a Comment

‘Indian doctors and healthcare professionals are a class apart’

‘Indian doctors and healthcare   professionals are a class apart’ Tamil Nadu Governor R.N. Ravi handing over a degree to a graduand at the c...