Wednesday, November 22, 2017


மினிமம் பேலன்ஸ் பற்றி கவலை இல்லாமல் எஸ்பிஐயில் வங்கிக் கணக்குத் தொடங்க விருப்பமா?

Published on : 21st November 2017 05:57 PM



வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லை என்றாலும் அபராதம் வசூலிக்காமல் இருக்கும் வகையில் எஸ்பிஐ வங்கி புதிய வங்கிக் கணக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.

வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லை என்றால் அபராதம் வசூலிக்கும் நடைமுறையால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாவிட்டாலும் வங்கிக் கணக்கில் அபராதம் வசூலிக்காத வகையில் ஒரு வங்கிக் கணக்கை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது எஸ்பிஐயின் பேஸிக் சேவிங்ஸ் அக்கவுண்டில், வாடிக்கையாளர்கள் கணக்குத் தொடங்கினால் அதில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச இருப்புத் தொகை என்ற மிகப்பெரிய சுமையால், ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படக் கூடாது, அவர்களது சேமிக்கும் கனவு தவிடுபொடியாகக் கூடாது என்பதற்காக நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா இந்த சேவையை தொடங்கியுள்ளது.

எந்தவொரு தனி நபரும் உரிய ஆவணங்களை அளித்து இந்த வங்கிக் கணக்கைத் தொடங்கலாம்.

அது பற்றிய சில சந்தேகங்களும்.. பதில்களும் இங்கே
இந்த வங்கிக் கணக்கில் ஏடிஎம் அட்டை வழங்கப்படுமா?
இந்த வங்கிக் கணக்கைத் தொடங்கும் வாடிக்கையாளருக்கு ரூபே ஏடிஎம் - டெபிட் கார்டு எந்த கட்டணமும் இல்லாமல் வழங்கப்படும். அதே போல, ஆண்டு பராமரிப்புக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது.

வட்டி விகிதம்
இந்த வங்கிக் கணக்கில் வைத்திருக்கும் பணத்துக்கும், பிற வங்கிக் கணக்கில் இருக்கும் தொகைக்கு வழங்கப்படும் அதே வட்டி வழங்கப்படும்.

குறைந்தபட்ச இருப்புத் தொகை?
இந்த வங்கிக் கணக்குக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகை என்பது இல்லை.

சேவைக் கட்டணங்கள்?
என்இஎஃப்டி அல்லது ஆர்டிஜிஎஸ் வழியாக ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம் எதுவும் இல்லை.


மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் காசோலைகள் அல்லது நேரடியாக இருப்பு வைக்கும் தொகைகளுக்குக் சேவைக் கட்டணம் கிடையாது.


கணக்கை முடிக்கவும், கணக்கை புதுப்பிக்கவும் கட்டணம் இல்லை.

வங்கிக் கணக்குத் தொடங்க ஒரே ஒரு விதிமுறைதான்..


அது என்னவென்றால், இந்த பேஸிக் சேவிங் அக்கவுண்டில் கணக்குத் தொடங்க விரும்புவோருக்கு, எஸ்பிஐ வங்கியின் எந்த கிளையிலும் எந்த வங்கிக் கணக்கும் இருக்கக் கூடாது. ஒரு வேளை ஒரு வாடிக்கையாளருக்கு எஸ்பிஐயில் சேமிப்புக் கணக்கு இருக்கும்பட்சத்தில், அந்த கணக்கை முடித்துவிட்டு 30 நாட்களுக்குப் பிறகு இந்த கணக்கைத் தொடங்கலாம்.

இந்த கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரு மாதத்துக்கு ஏடிஎம், இதர ஏடிஎம், பணப்பரிமாற்றம் என அனைத்து வகையையும் சேர்த்து 4 முறை மட்டுமே பணம் எடுக்கலாம். அதற்கு மேல் எடுக்க அனுமதிக்கப்படாது.

யார் யார் இதற்கு தகுதியானவர்கள்?
எஸ்பிஐயில் சேமிப்புக் கணக்கு தொடங்க தகுதி கொண்ட அனைவருமே இந்த கணக்கையும் தொடங்கலாம்.

எத்தனை வகை உண்டு?
தனிநபர், இருநபர் இணைந்து.

எந்த கிளைகளில் இந்த வசதி உண்டு?


எஸ்பிஐயின் அனைத்து வங்கிக் கிளைகளிலும் இந்த வகையான வங்கி கணக்குத் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

‘Indian doctors and healthcare professionals are a class apart’

‘Indian doctors and healthcare   professionals are a class apart’ Tamil Nadu Governor R.N. Ravi handing over a degree to a graduand at the c...