Wednesday, January 17, 2018

 நாட்டரசன்கோட்டையில் செவ்வாய் பொங்கல்
Added : ஜன 17, 2018

சிவகங்கை: தை முதல் செவ்வாய்க்கிழமையான நேற்று சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில் நகரத்தாரின் 'செவ்வாய் பொங்கல்' நடந்தது. இதற்காக, இப்பகுதியைச் சேர்ந்த நகரத்தார் பெயர்களை 'சீட்டில்' எழுதி பானையில் குலுக்கி ஒரு குடும்பத்தினரை தேர்வு செய்தனர். இந்த ஆண்டு சிவசுப்ரமணியன் குடும்பத்தார் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் நேற்று மாலை 5:00 மணிக்கு நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன் கோயில் முன் முதல் நபராக பெரிய மண்பானையில் பொங்கல் வைத்தனர். தொடர்ந்து 910 நகரத்தார்கள் மற்றும் மற்ற சமூகத்தினரும் வெண்கலம், சில்வர் பானைகளில் பொங்கல் வைத்தனர். வெண்
பொங்கல் மட்டுமே வைக்கப்பட்டது. தொடர்ந்து கண்ணுடைய நாயகி அம்மனுக்கு கிடா வெட்டி, அபிஷேகம் செய்தனர். ரஷ்யா, பிரான்ஸ் நாட்டினர் பங்கேற்றனர்.

வரன் தேடும் படலம்: நாட்டரசன்கோட்டை பகுதி நகரத்தார்கள் தொழில், கல்வி போன்ற காரணங்களுக்காக வெளியூர் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வசிக்கின்றனர். பொங்கல் விழாவில் அனைவரும் ஒரே இடத்தில் கூடுவதால், வரன் தேடும் படலமும் நடந்தது.

பாகனேரி செவ்வாய் பொங்கல்: பாகனேரி புல்வநாயகி அம்மன் கோயில் முன் நகரத்தார் செவ்வாய் பொங்கல் வைத்தனர். நேற்று மாலை 4:31 மணிக்கு 510 நகரத்தார்களும் ஒரே நேரத்தில் பொங்கல் வைத்தனர். அனைவரது பொங்கல் பானைக்கும் தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு அபிேஷகம் நடந்தது. குலுக்கலில் தேர்வு செய்யப்பட்ட மாதவன் குடும்பத்தாருக்கு முதல் மரியாதை வழங்கப்பட்டது.சுற்றுலா, பேரூராட்சித்துறை சார்பில் ஆண்டுதோறும் வெளிநாட்டினரை அழைத்து வருவது, பாரம்பரிய நிகழ்ச்சிகளை நடத்துவது போன்ற சிறப்பு ஏற்பாடு இருக்கும். இந்த ஆண்டு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. நகரத்தார்களே வெளிநாட்டினரை அழைத்து வந்தனர்.

No comments:

Post a Comment

RTI documents cannot be marked ‘not evidence’: GIC

RTI documents cannot be marked ‘not evidence’: GIC  TIMES NEWS NETWORK 28.10.2024 Ahmedabad : The Gujarat Information Commission (GIC) has r...