Wednesday, January 17, 2018

ஏப்., 14 முதல் ரஜினி சுற்றுப்பயணம் மதுரையில் ரசிகர் மன்ற மாநாடு

மக்கள் மன்றத்தில், ஒன்றரை கோடி உறுப்பினர்கள் சேர்ந்ததும், தமிழ் புத்தாண்டு முதல், மாநில சுற்றுப்பயணம் மேற்கொள்ள, நடிகர் ரஜினி திட்டமிட்டுள்ளார். அதன்பின், மதுரையில் ரசிகர்கள் மாநாட்டை நடத்தி, கட்சியின் பெயர், கொடி, சின்னத்தை அறிவிக்கிறார். இது தொடர்பாக, அரசியல் அறிஞர்கள், ஆன்மிக குருக்களிடம், ரஜினி ஆலோசனை நடத்தி வரும் தகவல் வௌியாகி உள்ளது.



நடிகர் ரஜினி துவக்கியுள்ள, மக்கள் மன்றத்திற்கு, ஒன்றரை கோடி உறுப்பினர்கள் சேர்ப்பது, இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது, சில லட்சம் பேர் தான் சேர்ந்துள்ளனர்; இன்னும், ஒரு கோடியை தாண்டவில்லை. ஏப்., 14ல், தமிழ் புத்தாண்டு தினத்தன்று, ரஜினி நடித்த, '2.0' திரைப்படம் வௌியிடப்படுகிறது. அப்படம் வௌிவந்த பின், பொது மக்களின் நாடித் துடிப்பை அறியவும், அவர்களின் ஆதரவை பெறவும், மாநில சுற்றுப் பயணம் செல்ல, ரஜினி முடிவு செய்துள்ளார்.

ரஜினியின் சுற்றுப் பயணத்தில், அவருக்கு கிடைக்கும் வரவேற்பை தொடர்ந்து, மதுரையில், தன் ரசிகர்கள் மாநாட்டை நடத்த உள்ளார். அதில், கட்சியின் பெயர், கொடி மற்றும் சின்னத்தையும், ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்துவது குறித்து, தனக்கு நெருக்கமானவர்களிடம், ரஜினி
ஆலோசனை நடத்தி வருகிறார்.இது குறித்து, ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூறியதாவது:
மாவட்ட வாரியாக

தற்போது, ரஜினி ரசிகர் மன்றங்கள், வருவாய் மாவட்ட அடிப்படையில், செயல்பட்டு வருகின்றன. அவற்றை,அமைப்பு ரீதியாக, மாவட்டங்களாக பிரிக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக, 60 மாவட்டங்கள் பிரிக்கப்பட வாய்ப்புள்ளது. ஒன்றரை கோடி உறுப்பினர்கள் சேர்த்த பின், மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர்.

இதற்கிடையில், பிற கட்சிகளின், 'மாஜி' அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களும், ரஜினியுடன் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். ரஜினி, கட்சி துவக்கிய பின், மாற்று கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள், திரளான தொண்டர்களுடன் வௌியேறி, இணைவதற்கு திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், கட்சியின் கொள்கை, மக்களுக்கு தரக்கூடிய வாக்குறுதிகள், செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. இதுபற்றி, அரசியல் அறிஞர்கள், மூத்த பத்திரிகையாளர்கள், அரசு அதிகாரிகளிடம், ரஜினி கருத்து கேட்டு வருகிறார். அதற்கு முன், பனிக்காலம் முடிந்ததும், இமயமலை சென்று, தன் ஆன்மிக குருநாதர்களை சந்தித்து, ஆசி பெறுகிறார். பின்,தமிழகம் திரும்பியதும், கட்சி பணிகளில், தீவிரமாக ஈடுபட, ரஜினி திட்டமிட்டுள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

ரகசிய சந்திப்பு!

பல்வேறு தரப்பினரையும், தனிப்பட்ட முறையில் சந்தித்து வரும் நடிகர் ரஜினி,

தொழில் துறையை சேர்ந்த முக்கிய பிரமுகர்களுடன், ரகசியமாக ஆலோசித்து வருகிறார்.

ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: கட்சி தொடங்குவது தொடர்பாக, பலரும் ஆலோசனை தெரிவிக்கின்றனர். எந்த ஒரு கருத்தையும் நிராகரிக்காமல், ரஜினி உள்வாங்கிக் கொள்கிறார். மாவட்ட அளவில், தொழில் துறையை சேர்ந்த முக்கிய பிரமுகர்களை, சென்னைக்கு அழைத்து பேசி வருகிறார்.

தொழில் துறை சந்தித்து வரும் பிரச்னைகள், அரசு தரப்பில் எதிர்பார்க்கும் உதவிகள் பற்றி கேட்கிறார். மேலும், 'அரசு தரப்பை எளிதில் அணுக முடிகிறதா; கோரிக்கைக்கு செவி சாய்க்கின்றனரா; அரசியல் களத்தில் இறங்கும்போது, ஒத்துழைப்பு கொடுப்பீர்களா' என்றும் கேட்கிறார்.வர்கள் நேரடியாக பதிலளிக்கின்றனரா, தயங்குகின்றனரா அல்லது ஒதுங்க நினைக்கின்றனரா என்பன போன்ற விஷயங்களை கவனித்து வருகிறார். வெற்றியை நோக்கியே பயணம் இருக்க வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு விஷயத்தையும் ஆழ்ந்து யோசித்து, கவனமாக அடியெடுத்து வருகிறார்.இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -

No comments:

Post a Comment

RTI documents cannot be marked ‘not evidence’: GIC

RTI documents cannot be marked ‘not evidence’: GIC  TIMES NEWS NETWORK 28.10.2024 Ahmedabad : The Gujarat Information Commission (GIC) has r...