கமல் அரசியல் பிரவேசம்: பிப்.,21ல் கட்சி பெயர்
Updated : ஜன 17, 2018 02:58சென்னை: பிப்.,21ம் தேதி கட்சியின் பெயரை அறிவிக்கும் கமல், ராமநாதபுரத்தில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை துவங்குகிறார்.
இதுகுறித்து கமல் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜனநயகத்தின் நாயகர்களை சந்திக்க சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன். உங்கள் ஆதரவோடு இந்த பயணத்தை துவக்குகிறேன். தலைவன் வழிநடத்தவே இருக்க வேண்டும். என்னை வளர்த்தெடுத்த சமூகத்திற்கு நன்றி தாண்டி ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன. இந்த சந்திப்பு புரட்சிக்காகவோ, கவர்ந்திழுக்கவோ அல்ல; எனது புரிதல் மற்றும் எனது கல்விக்காக மட்டுமே.
குடியரசில் குடிமக்களை உயர்த்த வேண்டும். அதை நோக்கி என் பயணம் இருக்கும். நாம் சேர்ந்து தேரை இழுக்கிறோம் என்ற எண்ணம் வேண்டும். அதுவே ஜனநாயகம். கரம் கோரத்திடுங்கள்; களத்தில் சந்திப்போம். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பிப்.,21ல் தனது கட்சி பெயரை அறிவிக்கும் கமல், அன்றே ராமநாதபுரத்தில் சுற்றுப்பயணத்தை துவங்குகிறார். முதற்கட்டமாக மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க உள்ளார்.
No comments:
Post a Comment