Wednesday, January 17, 2018

 பெண்கள் மட்டுமே ஆடிப்பாடி கொண்டாடிய காணும் பொங்கல்

ஈரோடு: ஈரோட்டில், பெண்கள் மட்டுமே கொண்டாடும், காணும் பொங்கலில், இளைஞிகள் முதல், வயதான பெண்கள் வரை, ஆடிப்பாடி, பொழுது போக்கி மகிழ்ந்தனர்.

தமிழகத்தில் வேறெங்கும் இல்லாத வகையில், பெண்கள் மட்டுமே கொண்டாடும், காணும் பொங்கல், ஈரோட்டில் பல ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஈரோடு மட்டுமின்றி சுற்றியுள்ள பள்ளிபாளையம், பவானி, விஜயமங்கலம், பெருந்துறை பகுதிகளில் இருந்தும், காணும் பொங்கல் தினமான நேற்று, விழா நடக்கும், வ.உ.சி., பூங்காவுக்கு படையெடுக்கத் தொடங்கினர். பலர், வீடுகளில் இருந்து உணவு பண்டங்களை எடுத்து வந்தனர்.

உறவினர்கள் மற்றும் தோழியருடன் பகிர்ந்துண்டனர். இளம்பெண்கள், சிறுவர், சிறுமியர் வயது வித்தியாசமின்றி ஆடிப்பாடி, விளையாடினர். கும்மியடித்தும், கோலாட்டம் ஆடியும், இசைக்கு ஏற்றவாறு நடனமாடி மகிழ்ந்தனர்.

கடந்த ஆண்டுகளில் நடந்த, காணும் பொங்கல் நினைவுகளை, பகிர்ந்து கொண்டனர்.

இதில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி என்றாலும், 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களும் அனுமதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு, தை அமாவாசை நாளில், காணும் பொங்கல் வந்ததால், கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024