மருத்துவக் கல்வி இடங்கள் போதிய அளவில் இல்லை: குடியரசுத் தலைவர் கவலை
By DIN | Published on : 17th January 2018 01:15 AM |- |
தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பதக்கம் வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் போதிய அளவில் இல்லை என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கவலை தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் மக்கள் தொகைக்கும், மருத்துவர்களின் எண்ணிக்கைக்கும் நடுவே மிகப் பெரிய வித்தியாசம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ராம்நாத் கோவிந்த், கடந்த ஆண்டில் மருத்துவக் கல்வி மற்றும் பயிற்சி நிறைவு செய்த மருத்துவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: நாட்டில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு 67,000 இடங்களும், முதுநிலைப் படிப்புகளுக்கு 31,000 இடங்களும் உள்ளன. அதேவேளையில் நாட்டின் மக்கள்தொகை 130 கோடியாக உள்ளது.
மக்கள்தொகையின் அடிப்படையில் பார்த்தால் மருத்துவக் கல்லூரி இடங்கள் போதுமானதாக இல்லை. மருத்துவப் படிப்புகளுக்காக விண்ணப்பிக்கும் பலருக்கு வாய்ப்பு கிடைப்பதும் இல்லை. இதன் விளைவாக அவர்களில் பலர் வெளிநாடுகளில் மருத்துவக் கல்வி பயிலச் செல்கின்றனர். இத்தகைய சூழல் நீடிப்பதை நியாயப்படுத்த இயலாது. இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டியது அவசியம். மருத்துவ சேவையாற்ற விரும்பும் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தரவேண்டிய தேவை எழுந்துள்ளது.
இது ஒருபுறமிருக்க, மக்களுக்கு தரமான மருத்துவ சேவைகள் கிடைப்பது மற்றொரு முக்கிய பிரச்னையாக உள்ளது. போதிய மருத்துவர்கள் இல்லாததே அதற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. தற்போதைய சூழலில் மருத்துவர்களிடம் அளவுக்கு அதிகமான பொறுப்புகள் சுமத்தப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக அவர்களுக்கு சில உதவிகள் தேவைப்படுவதையும் என்னால் உணர முடிகிறது. அதாவது, கூடுதல் எண்ணிக்கையிலான மருத்துவர்களை உருவாக்கி, பணிச்சுமையைக் குறைக்க வேண்டும் என்பதே அவர்களது எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த விவகாரத்துக்கு உரிய தீர்வு காண வேண்டியுள்ளது.
பொதுவாகவே ஏழை, பணக்காரர்களைப் பார்த்து நோய்கள் தாக்குவதில்லை. ஆனால், இறுதியில் அவற்றால் பெரிதும் பாதிக்கப்படுவது ஏழை மக்கள் மட்டுமே. மருத்துவ சேவைகளால் இந்த சமூகம் பயன்பெற வேண்டுமே தவிர, சமூகத்தின் வாயிலாக மருத்துவத் துறை லாபமடையக் கூடாது என்றார் ராம்நாத் கோவிந்த்.

No comments:
Post a Comment