Tuesday, January 23, 2018

மருத்துவக் கல்வி இயக்குனர் பதவி இறக்கம் : உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்

Added : ஜன 23, 2018 00:47

மதுரை: தமிழக மருத்துவக் கல்வி இயக்குனராக இருந்த எட்வின் ஜோ பதவி இறக்கம் செய்யப்பட்டு, டீனாக நியமிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவித்ததால், வழக்கை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை முடித்து வைத்தது. கோவை அரசு மருத்துவக் கல்லுாரி டீனாக இருந்த எட்வின் ஜோவை மருத்துவக் கல்வி இயக்குனராக நியமித்து 2017 ஏப்.,25 சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி டீன் ரேவதி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்தார். தனிநீதிபதி, ''எட்வின் ஜோவை மருத்துவக் கல்வி இயக்குனராக நியமித்தஅரசாணையை ரத்து செய்கிறேன். மனுதாரருக்கு பதவி உயர்வு அளித்து, மருத்துவக் கல்வி இயக்குனராக நியமிக்க வேண்டும்,''என உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து தமிழக அரசு மற்றும் எட்வின் ஜோ சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 2017 டிச.,12ல்நீதிபதிகள்,'எட்வின் ஜோவை மருத்துவக் கல்வி இயக்குனராக நியமித்த அரசாணையை ரத்து செய்கிறோம். ரேவதிக்கு பதவிஉயர்வு அளித்து, மருத்துவக் கல்வி இயக்குனராக நியமிக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவையும் ரத்துசெய்கிறோம்.

எட்வின் ஜோ, ரேவதி, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லுாரி டீன் மீனாட்சி சுந்தரத்தின் தகுதி, திறமை, பணிமூப்பு அடிப்படையில் சட்டத்திற்குட்பட்டு மறு பரிசீலனை செய்து சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ஆறு வாரங்களில்தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,' என்றனர்.
ரேவதி, ''நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் எட்வின் ஜோ பதவியில் தொடர்கிறார். அவரை பணியிலிருந்து விடுவிக்க உத்தரவிடவேண்டும்,'' என மனு செய்தார்.
நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார்.

அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், ''மருத்துவக் கல்வி இயக்குனராக இருந்த எட்வின் ஜோ ஜன., 4 முதல் விடுப்பில் சென்றார். வேறு ஒருவரை அப்பணியிடத்தில் நியமனம் செய்யும்வரை, சென்னை ஓமந்துாரார் எஸ்டேட் அரசு மருத்துவக் கல்லுாரி டீனாக உள்ள நாராயணபாபு, மருத்துவக் கல்வி இயக்குனர் பணியை கூடுதல் பொறுப்பாக கவனித்து வருவார்.
உயர்நீதிமன்றக்கிளை உத்தரவுப்படி மருத்துவக் கல்வி இயக்குனர் பணியிடம் காலியாக வைக்கப்பட்டுள்ளது. எட்வின் ஜோ பதவி இறக்கம் செய்யப்பட்டு, அவரை டீனாக நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது,'' என்றார்.
இதை பதிவு செய்தநீதிபதி,''இவ்வழக்கில் மேலும் எவ்வித உத்தரவும் தேவையில்லை,'' எனக்கூறி முடித்து வைத்தார்.

No comments:

Post a Comment

RTI documents cannot be marked ‘not evidence’: GIC

RTI documents cannot be marked ‘not evidence’: GIC  TIMES NEWS NETWORK 28.10.2024 Ahmedabad : The Gujarat Information Commission (GIC) has r...