Tuesday, January 23, 2018

எமதர்மராஜன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

Added : ஜன 23, 2018 02:44




தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள எமதர்மராஜன் கோவில் கும்பாபிஷேகத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருச்சிற்றம்பலத்தில் எமதர்மராஜனுக்கு தனி கோவில் உள்ளது. 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலின் கும்பாபிஷேக பணிகள், சில மாதங்களாக, மூன்று கோடி ரூபாய் மதிப்பில் நடந்தன.
கடந்த, 19ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கி, நேற்று காலை நான்காம் கால பூஜைகள் நடந்தன. தொடர்ந்து கடம் புறப்பாடு முடிந்து, மகா கும்பாபிஷேகம் நடந்தது. தீபாராதனையைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
கோவிலின் மூலஸ்தானத்தில், 6 அடி நீள எருமை வாகனத்தில், 7.25 அடி உயர எமதர்மராஜன் சிலையும், கோவில் வளாகத்தில், ஒன்பது பரிவார தெய்வங்களின் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

RTI documents cannot be marked ‘not evidence’: GIC

RTI documents cannot be marked ‘not evidence’: GIC  TIMES NEWS NETWORK 28.10.2024 Ahmedabad : The Gujarat Information Commission (GIC) has r...