Friday, January 26, 2018

தியாகியிடம் மன்னிப்பு கேட்ட உயர் நீதிமன்றம்
வீட்டுக்கு சென்று பென்ஷன் வழங்க உத்தரவு


சென்னை:சுதந்திரப் போராட்ட தியாகியின் வீட்டுக்கு சென்று, 'பென்ஷன்' வழங்குவதற் கான உத்தரவை வழங்கும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தியாகியை அதிகாரிகள் கஷ்டப்பட வைத்ததற்காக, அவரிடம், நீதிமன்றம் மன்னிப்பும் கோரியது.





சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்தவர், வி.காந்தி; நேதாஜி தலைமையிலான இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

பதில் இல்லை

பர்மா, ரங்கூன் சிறையில், 1945 மே மாதம் முதல், டிசம்பர் வரை அடைக்கப்பட்டார். மாநில அரசின் பென்ஷன் கேட்டு, 1980ல், விண்ணப்பித்தார்; 12 ஆண்டுகள் காத்திருந்தார்; எந்த பதிலும் இல்லை. 1992 நவம்பரில், நினைவூட்டும் கடிதம் அனுப்பினார்; அரசு பரிசீலிக்கவில்லை.ரங்கூன் சிறையில், காந்தியுடன் இருந்த காளிமுத்து என்பவர், சான்றிதழ் வழங்கினார். மத்திய அரசின் பென்ஷன் தொகையை, காளிமுத்து பெற்று வந்தார்.

இந்திய தேசிய ராணுவத்தில், கர்னலாக இருந்த, டாக்டர் லட்சுமி ஷாகலும், சான்றிதழ் வழங்கினார். இந்த சான்றிதழ்களை எல்லாம் அனுப்பியும், பென்ஷன் வழங்கப்படவில்லை.

ஆஜர்

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், காந்தி மனு தாக்கல் செய்தார். 89 வயதாகும் தனக்கு, கால தாமதம் செய்யாமல், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான பென்ஷன் வழங்கும்படி கோரியிருந்தார். மனுவை, நீதிபதி,ரவிச்சந்திரபாபு விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர், எம்.புருஷோத்தமன் ஆஜரானார்.நீதிபதி, ரவிச்சந்திரபாபு பிறப்பித்த உத்தரவு:

சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டதற்கான சான்றிதழை, டாக்டர் லட்சுமி ஷாகல் வழங்கி உள்ளார். மனுதாரரின் கோரிக்கை நியாயமானது என்பதற்கு, அகில இந்திய சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்கள் அமைப்பின் தலைவர், குருமூர்த்தியும், கடிதம் அனுப்பி உள்ளார்.
மனுதாரர் வறுமையில் இருப்பதாகவும், அவரை காப்பாற்றும்படியும், கடிதத்தில் குறிப்பிட்டு
உள்ளார்.

அவசர தன்மை குறித்து கவனத்துக்கு கொண்டு வந்தும், மனுதாரரின் கோரிக்கையை கனிவுடன் அதிகாரிகள் பரிசீலிக்கவில்லை. சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று, தன்னலம் பாராத பங்களிப்பை ஆற்றியவரின் கோரிக்கையை, அரசு கவனிக்க தவறி விட்டது. மனுதாரரை போன்றவர்களின் பங்களிப்பு இல்லாமல், நாம் இந்த நிலைக்கு வந்திருக்கமுடியாது என்பதை, கவனிக்க தவறி விட்டனர்.

நாட்டின் விடுதலைக்காக போராடியவரை, சுதந்திரம் கிடைத்த பிறகும், பென்ஷனுக்காக போராடத் தள்ளியது வருத்தம் அளிக்கிறது. சுதந்திரத்துக்காக போராடியவர்களை, கண்ணியத்துடன் கவுரவப்படுத்த வேண்டும்.

அவர்களை அழைத்து, மரியாதை செய்ய வேண்டும்; காக்க வைக்கக் கூடாது. அவருடன் இருந்த சிறைவாசி, கர்னல் லட்சுமி ஷாகல் ஆகியோர் சான்றிதழ் அளித்திருக்கும் போது, அதிகாரிகளின் மனதில் சந்தேகம் வரக் கூடாது.

பென்ஷன் கோரிய விண்ணப்பத்தை நிராகரிப் பதற்காக, ஏதோ ஒரு காரணத்தை கண்டு பிடித்துள்ளனர். அவரது வயது குறித்து, சந்தேகம் எழுப்பி உள்ளனர்.

துரதிருஷ்டம்

அதிகாரிகள் கூறிய காரணங்களை ஏற்க முடி யாது. 'நம் அதிகாரிகள், உங்களை கஷ்டப்பட வைத்ததற்காக, மன்னிப்பு கேட்கிறேன். சுதந்திரத்துக்காக போராடிய இந்த நாட்டில், அதிகார வர்க்கத்தின் வறட்டு பிடிவாத செயல் பாடு துரதிருஷ்டவசமானது' என்பதை மட்டுமே, மனுதாரரிடம் கூற முடியும்.சுதந்திரப் போராட்ட வீரரான காந்திக்கு, பென்ஷன் வழங்கு வதற்கான உத்தரவை, அவரது வீட்டுக்கே சென்று, அதிகாரிகள் வழங்க வேண்டும். இரண்டு வாரங்களில், அதை வழங்க வேண்டும். நான்கு வாரங்களில், பென் ஷன் பாக்கியை கணக்கிட்டு தர வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

How can flyover less than 10 yrs old tumble down, must probe ‘scam’: HC

How can flyover less than 10 yrs old tumble down, must probe ‘scam’: HC New Delhi : 27.11.2024  Terming it a “scam”, Delhi High Court on Tue...