Friday, January 26, 2018

போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது உயர்நீதிமன்றம்

Added : ஜன 25, 2018 23:31

மதுரை: மதுரைக் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, உயர்நீதிமன்றம்மதுரைக் கிளை உத்தரவிட்டது.

அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு, சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது. இதில் விடுப்புக்கால பலன்கள் வழங்கியதில் குளறுபடிகள் உள்ளதாகக்கூறி, ஓய்வூதியத்தில் நிர்வாகம் பிடித்தம் செய்தது. இதைஎதிர்த்து பலர் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். பிடித்தம் செய்தது தவறு என தனிநீதிபதி உத்தரவிட்டார்.

இதை எதிர்த்துபோக்குவரத்துக் கழக நிர்வாகம் செய்த மேல்முறையீட்டு மனுவை, 2014 ல் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மதுரைக்கோட்ட அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர், மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தார்.

நீதிபதிகள்,'ஏற்கனவே தீர்வு கண்டநிலையில், மீண்டும் நீதிமன்றத்தை நாடியதால் மனுதாரருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படுகிறது,' என்றனர்.
நீதிபதிகள் என்.
கிருபாகரன், ஆர்.தாரணி அமர்வு நேற்று விசாரித்தது.
மதுரைக் கோட்ட மேலாண்மை இயக்குனர் இளங்கோவன் ஆஜராகி, வருத்தம் தெரிவித்தார்.

நீதிபதி கிருபாகரன்,''நீதிமன்ற உத்தரவுகளை போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நிறைவேற்றுவதில்லை. தேவையின்றி நீதிமன்றத்தை நாடி மக்களின் பணத்தை வீணடிக்கின்றனர்.

பலர் வேலை செய்யாமல் சம்பளம் பெறுகின்றனர். இதனால் போக்குவரத்துக் கழகத்திற்கு இழப்பு ஏற்படுகிறது.

போக்குவரத்துக் கழக நிர்வாக நிதி நெருக்கடியை சமாளிக்க பஸ் கட்டணத்தை உயர்த்தினால், எதிர்க்கின்றனர்,'' என அதிருப்தியை வெளிப்
படுத்தினார்.

நீதிபதிகள் உத்தரவு

சட்டத்தை தவறாக பயன்படுத்தி தேவையின்றி மேல்முறையீடு செய்த மனுதாரருக்கு 25 ஆயிரம் ரூபாய்அபராதம் விதிக்கிறோம். தொகையை டில்லியில் உள்ள போரினால் பாதிக்கப்பட்ட விதவைகள் சங்கத்திற்கு 2 வாரங்களில்வழங்க வேண்டும்.

பிடித்தம் செய்யப்பட்ட உரிய தொகையை எதிர்மனுதாரர்களுக்குநிர்வாகம் எட்டு வாரங்களில் வழங்க வேண்டும். பிப்.,20 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,என்றனர்.

No comments:

Post a Comment

How can flyover less than 10 yrs old tumble down, must probe ‘scam’: HC

How can flyover less than 10 yrs old tumble down, must probe ‘scam’: HC New Delhi : 27.11.2024  Terming it a “scam”, Delhi High Court on Tue...