Wednesday, January 24, 2018

லைசென்ஸ் இருக்கா எனக் கேட்ட போலீஸ்காரருக்கு நேர்ந்த கொடுமை! வாலிபர் வெறிச்செயல்
துரை.வேம்பையன்

RAJAMURUGAN N

Karur:

கரூரில் நேற்றிரவு வாகன சாேதனையில் ஈடுபட்டிருந்த பாேக்குவரத்துக் காவலரை குடிபாேதையில் வந்த வாலிபர் கத்தியால் கழுத்தை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கரூர் பாேக்குவரத்து ஏட்டாக இருப்பவர் இளங்காே. இவர் வழக்கம்பாேல் நேற்றிரவு (22.1.2018) கரூர் நகரில் வாகன சாேதனையில் ஈடுபட்டிருந்தார். அப்பாேது, இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்திருக்கிறார் முரளி என்ற வாலிபர். அவரை மடக்கிய இளங்காே அவரிடம், 'லைசென்ஸ், ஆர்.சி புக், இன்ஷூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களைக் கேட்டிருக்கிறார். அதற்கு அந்த வாலிபர், 'என்கிட்ட அதெல்லாம் இல்லை. முடிந்ததைப் பார்த்துக்குங்க' என்று தெனாவெட்டாகப் பதில் சாெல்லி இருக்கிறார். உடனே இளங்காே, முரளியின் வாகனத்தைப் பறிமுதல் செய்ததாேடு, `காேர்ட்டில் பைன் கட்டிட்டு பைக்கை எடுத்துக்க' என்று சாெல்லியிருக்கிறார்.

இதனால், காேபமான முரளி, 'ஒழுங்கா வண்டியைக் காெடுத்திடுங்க. இல்லைன்னா, நான் சும்மா இருக்க மாட்டேன்' என்று மிரட்டலாகச் சாெல்லியிருக்கிறார். ஆனால், இளங்காே, 'டேய்... முடிஞ்சதைப் பாருடா. பாேலீஸையே மிரட்டுறியா' என்று பதிலுக்குச் சாெல்லியிருக்கிறார். காேபம் குறையாமல் பாேன முரளி ஒயின்ஷாப்புக்குச் சென்று மது அருந்திவிட்டு, நேராக இளங்காேவிடம் சென்று, 'என்கிட்டயே லைசென்ஸ் கேட்பியா. என் வண்டியையே சீஸ் பண்ணுவியா' என்றபடி கையில் மறைத்து எடுத்து வந்த கத்தியால் இளங்காேவின் கழுத்தை கரகரவென அறுத்திருக்கிறார்.

இதனால், இளங்காே அலற, அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து முரளியை மடக்கிப்பிடித்து, இளங்காேவை அவரிடமிருந்து மீட்டனர். உடனடியாக இளங்காேவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியாேட முயன்ற முரளியையும் விரைந்து வந்த கரூர் நகர பாேலீஸார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment

RTI documents cannot be marked ‘not evidence’: GIC

RTI documents cannot be marked ‘not evidence’: GIC  TIMES NEWS NETWORK 28.10.2024 Ahmedabad : The Gujarat Information Commission (GIC) has r...