Saturday, January 20, 2018

ஆறு ஆண்டுகளுக்கு பின் பஸ் கட்டணம் உயர்வு : இன்று முதல் அமலாகிறது


சென்னை தமிழகத்தில், ஆறு ஆண்டுகளுக்கு பின், பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய கட்டண உயர்வு, இன்று முதல் அமலுக்கு வருகிறது. 'புதிய கட்டணம், தனியார் பஸ்களுக்கும் பொருந்தும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில், 2011 நவ., 18ல், பஸ் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டது. அதன்பின், கட்டணம் உயர்த்தப்படவில்லை. அண்டை மாநிலங்களோ, பல முறை கட்டணத்தை உயர்த்தின. ஏழு ஆண்டுகளில், அரசு போக்குவரத்து கழகங்களின் நிதி நெருக்கடியை சமாளிக்க, தமிழக அரசு, 12 ஆயிரத்து, 59 கோடி ரூபாயை மானியமாக வழங்கி உள்ளது.

அரசு போக்குவரத்து கழகங்களுக்கு, இதுவரை ஏற்பட்டுள்ள தொடர் நஷ்டம், 20 ஆயிரத்து, 488 கோடி ரூபாய். போக்குவரத்து கழகங்கள் சிறப்பாக இயங்கவும், நிதி நெருக்கடியை சமாளிக்கவும், பொதுமக்களுக்கு சிறந்த போக்குவரத்து சேவையை வழங்கவும், அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தி
உள்ளது.அதன்படி, புறநகர் பஸ்களில், குறைந்தபட்ச கட்டணம், ஐந்து ரூபாயிலிருந்து, ஆறு ரூபாய்; நகர் மற்றும் மாநகர பஸ்களில், மூன்று ரூபாயில் இருந்து, ஐந்து ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதிகபட்ச கட்டணம், 12 ரூபாயில் இருந்து, 19 ரூபாயாகவும், சென்னையில், குறைந்த பட்ச கட்டணம், மூன்று ரூபாயில்

இருந்து, ஐந்து ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம், 14 ரூபாயில் இருந்து, 23 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.வால்வோ பஸ்களில், ஒன்று முதல், 38 நிலை வரை, குறைந்தபட்ச கட்டணம், 15 ரூபாயில் இருந்து, 25 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம், 100 ரூபாயில் இருந்து, 150 ரூபாயாகவும்உயர்த்தப்பட்டுள்ளது.

இருப்பினும், 'அண்டை மாநிலங்களை விட, குறைவாகவே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய பஸ் கட்டணம், தனியார் பஸ்களுக்கும் பொருந்தும். இந்த கட்டண உயர்வு, இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.எதிர்காலங்களில், எரிபொருள் மற்றும் மசகு எண்ணெய் விலை ஏற்றங்கள், இயக்கச் செலவுகள், பழுது நீக்கும் செலவுகள் மற்றும் பராமரிப்பு செலவுகளில் ஏற்படும் மாற்றங்கள், பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு போன்றவற்றின் அடிப்படையில், அரசு உயர் அதிகாரிகள் குழு, பஸ் கட்டணத்தை மாற்றி அமைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இழப்பீடு

அரசு பஸ்களால் ஏற்படும் விபத்துகளால் பாதிக்கப்படுவோருக்கு, இழப்பீடு வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. உயிரிழப்புக்கு, 15 வயது வரை உள்ளோருக்கு, 2.50 லட்சம் ரூபாய்; 16 - 60 வயது உள்ளோருக்கு, ஐந்து லட்சம் ரூபாய்; 60 வயதிற்கு

மேற்பட்டோருக்கு, 2.50 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
சிறு காயத்திற்கு, 10 ஆயிரம் - 25 ஆயிரம் ரூபாய்; தலை காயம் மற்றும் நிரந்தர உறுப்பு இழப்பிற்கு, ஐந்து லட்சம் ரூபாய்; பெரிய காயம், எலும்பு முறிவுக்கு, இரண்டு லட்சம் ரூபாய்; எலும்பு முறிவுக்கு, ஒரு லட்சம் ரூபாய் வங்கப்படும்.

பஸ் கட்டணம் உயர்வு ஏன்?

தமிழகத்தில், எட்டு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் தனியார் பஸ் நிறுவனங்கள், பொதுமக்களுக்கு போக்குவரத்து சேவைகளை வழங்கி வருகின்றன.

அரசு போக்குவரத்துக் கழகங்கள், 22 ஆயிரத்து, 509 பஸ்கள் மற்றும், 1.40 லட்சம் போக்குவரத்துப் பணியாளர்களுடன் இயங்கி வருகின்றன.டீசல் மற்றும் மசகு எண்ணெய் விலை அடிக்கடி உயர்த்தப்படுகிறது. புதிய பஸ்களின் விலை உயர்வு, உதிரி பாகங்களின் விலை உயர்வு, பணியாளர்கள் சம்பள உயர்வு மற்றும் இதர செலவுகள் அதிகரித்துள்ளதால், கூடுதல் செலவு ஏற்படுகிறது.
டீசல் விலை உயர்வுக்காக, அரசு மானியம் வழங்கி வரும் நிலையிலும், தினமும், ஒன்பது கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. தற்போதுள்ள பஸ்களில், 75 சதவீதம், ஆறு ஆண்டுகளுக்கு மேற்பட்டவை.
அவற்றின் இயக்கத்திறனும் படிப்படியாக குறைந்து வருகிறது. எனவே, பஸ் கட்டணங்களை, மாற்றி அமைக்க வேண்டிய சூழலுக்கு, அரசு தள்ளப்பட்டுள்ளது என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

RTI documents cannot be marked ‘not evidence’: GIC

RTI documents cannot be marked ‘not evidence’: GIC  TIMES NEWS NETWORK 28.10.2024 Ahmedabad : The Gujarat Information Commission (GIC) has r...