Sunday, July 22, 2018

985 செவிலியர்கள் விரைவில் நியமனம் : அமைச்சர் தகவல்

Added : ஜூலை 22, 2018 01:59

புதுக்கோட்டை: ''தமிழகத்தில் உள்ள துணை ஆரம்ப சுகாதார நிலையங்களில், 985 கிராம சுகாதார செவிலியர்கள் புதிதாக பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்,'' என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நடந்த ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற பின், அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:தமிழகத்தில் தான், இரண்டு கிராம சுகாதார செவிலியர்களைக் கொண்டு, துணை ஆரம்ப சுகாதார நிலையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கிராம சுகாதார மையங்களில், 8,706 செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதை, இரட்டிப்பாக்கும் முயற்சியை அரசு மேற்கொண்டுள்ளது. முதற்கட்டமாக, 985 கிராம சுகாதார செவிலியர்கள் புதியதாக நியமிக்கப்படஉள்ளனர். தமிழகத்தில், 16 மாவட்டங்களில் எய்ட்ஸ் நோய் இல்லை. மற்ற மாவட்டங்களில் கட்டுக்குள் வைத்துள்ளோம். தமிழகத்தில், 1.89 லட்சம் பேருக்கு, எய்ட்ஸ் நோய் தாக்கம் உள்ளதாக வெளியான தகவல் தவறானது.இவ்வாறு, அவர்

தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வரும் கல்வியாண்டு முதல்.. டிகிரி படிக்க இனி 3 வருசம் , 4 வருசம் தேவையில்லை.. யுஜிசி மேஜர் அறிவிப்பு

வரும் கல்வியாண்டு முதல்.. டிகிரி படிக்க இனி 3 வருசம் , 4 வருசம் தேவையில்லை.. யுஜிசி மேஜர் அறிவிப்பு  By Velmurugan P  Published: Thursday, N...