Saturday, October 13, 2018

மேலும், 8 தீபாவளி ரயில் : தெற்கு ரயில்வே பொது மேலாளர் அறிவிப்பு

Added : அக் 12, 2018 22:34

சென்னை: ''தீபாவளிக்காக, தென் மாவட்டங்களுக்கு, மேலும், எட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்,'' என, தெற்கு ரயில்வே பொதுமேலாளர், குல்ஷ்ரேஸ்தா தெரிவித்தார்.சென்னையில், 'ரயில் பார்ட்னர்' என்ற, 'மொபைல் ஆப்'பை அறிமுகம் செய்த, தெற்கு ரயில்வே பொதுமேலாளர், குல்ஷ்ரேஸ்தா கூறியதாவது:

தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் ரயில்களில், ஆறு மாதங்களில், 42.2 கோடி பேர் பயணம் செய்துள்ளனர்; 17 ஆயிரத்து, 735 டன் சரக்கு போக்குவரத்து நடந்துள்ளது. இந்த வகையில், 4,434 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.தீபாவளிக்கு, 42 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மேலும், எட்டு சிறப்பு ரயில்கள் விரைவில் அறிவிக்கப்படும். தேவைக்கேற்ப, தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.திருவாரூர் - திருத்துறைபூண்டி - பட்டுக்கோட்டை மற்றும் மதுரை -உசிலம்பட்டி இடையே யான மீட்டர் கேஜ் பாதையை, அகல ரயில் பாதையாக மாற்றும் பணியும்; கூடுவாஞ்சேரி - சிங்கப்பெருமாள் கோவில்; மேச்சேரி ரோடு - மேட்டூர் அணை புதிய பாதை பணிகளும், இந்தாண்டு இறுதிக்குள் முடிவடையும்.துாத்துக்குடி மேலவிட்டான் - மேல்மருதுார் புதிய பாதை; சென்னை கடற்கரை - கொருக்குப்பேட்டை நான்காவது ரயில் பாதை; கொருக்குப்பேட்டை - திருவொற்றியூர் இடையேயான பணிகளும், டிசம்பருக்குள் முடியும்.ஆறு மாதங்களில், 46 ரயில்களில், நவீன, எல்.எச்.பி., ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. 

தெற்கு ரயில்வேயில், ஆள் இல்லாத ரயில்வே கேட்டுகளே இல்லை. தெற்கு ரயில்வே முழுவதும், 100 சதவீதம், எல்.இ.டி., மின் விளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு குல்ஷ்ரேஸ்தா கூறினார்.புதிய வசதி என்ன?'ரயில் பார்ட்னர்' என்ற, 'மொபைல் ஆப்' குறித்து, தெற்கு ரயில்வே முதன்மை தலைமை வர்த்தக மேலாளர், பிரியம்வதா விஸ்வநாத்கூறியதாவது:இந்த, 'மொபைல் ஆப்' வாயிலாக, ரயில்களின் விபரங்கள், ரயில் வந்து கொண்டிருக்கும் இடம், பி.என்.ஆர்., நிலவரம், முன்பதிவு டிக்கெட் ரத்து, முன்பதிவில்லா டிக்கெட் பதிவு, ரயில்வே விசாரணை எண்கள், பார்சல் முன்பதிவு வசதி போன்ற விபரங்களை அறியலாம்.மேலும், வெளிநாட்டு சுற்றுலா விபரம், நிலையங்களில் பயணியருக்கு உள்ள வசதிகள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். அதேநேரத்தில், எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு, முன்பதிவு செய்ய முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

How twins evaded arrest for long time

How twins evaded arrest for long time TIMES OF INDIA NEW DELHI   25.09.2024  On Sept 21, a woman was purchasing fruits at Burari Chowk when ...