Saturday, October 13, 2018

தாமிரபரணி மகா புஷ்கர விழா: புனித நீராட குவிந்த பக்தர்கள்

Added : அக் 12, 2018 21:22

திருநெல்வேலி: தாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில், ஆற்றங்கரையில் புனித நீராட, அதிகாலை முதலே, மக்கள் கூட்டம் அலைமோதியது.தாமிரபரணி மகா புஷ்கர விழா, நேற்று முன்தினம் துவங்கியது. பாபநாசத்தில் துவங்கிய விழாவில், கவர்னர் புரோஹித் புனித நீராடினார்.நேற்று, 12ம் தேதி முதல், 23ம் தேதி வரை, 12 ராசிக்காரர்களும் தாமிரபரணியில் நீராடினால், புனிதம் கிட்டும் என்பதால், தாமிரபரணியில், நேற்று அதிகாலை முதலே, குடும்பம், குடும்பமாக மக்கள் புனித நீராடினர்.

நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில் உள்ள ஏராளமான படித்துறைகளில், பெண்கள், மஞ்சள் பொடியை தண்ணீரில் கரைத்து, புனித நீராடினர். பொதுமக்கள் வீடுகளுக்கு, பாட்டில்களில் புனித நீர் எடுத்துச் சென்றனர்.வழக்கத்திற்கு மாறாக, அதிகாலை, 5:00 மணி முதலே, பொதுமக்கள் ஆற்றங்கரையில் குவிந்தனர். காலை, 9:00 மணி வரை கூட்டம் அலைமோதியது. பின், வெயில் வர துவங்கியதால், படிப்படியாக கூட்டம் குறைந்தது. இன்று சனி, நாளை ஞாயிறு விடுமுறை தினம் என்பதால், மேலும் கூட்டம் அதிகரிக்கும் என தெரிகிறது.கூடுதல் சிறப்பு ரயில்கள் தாமிரபரணி புஷ்கர விழாவிற்கு, வட மாநிலங்கள் மற்றும் வட மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதற்காக, தெற்கு ரயில்வே ஐந்துக்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. இவை அனைத்திலும், கூட்டம் அலை மோதுகிறது.தவிர, நெல்லை, பொதிகை, சிலம்பு, அனந்தபுரி, கன்னியாகுமரி, செந்துார் எக்ஸ்பிரஸ் என, சென்னை - நெல்லை மார்க்கத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களிலும், வழக்கத்திற்கு மாறாக, கூட்டம் நிரம்பி வழிகிறது.

இவை அனைத்திலும், புஷ்கர விழா முடியும், 23ம் தேதி வரை, முன்பதிவு முடிந்து, 200க்கு மேல் காத்திருப்போர் பட்டியல் காணப்படுகிறது. எனவே, பக்தர்களின் வசதிக்காக, கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.குமரியிலும் கோலாகலம்கன்னியாகுமரி மாவட்டத்தில், வரலாற்றுச் சிறப்பு மிக்க, திக்குறிச்சி மகாதேவர் கோவில் அருகிலுள்ள, தாமிரபரணி தீர்த்தப்படித் துறையிலும், புஷ்கர விழா துவங்கி, நடக்கிறது.

No comments:

Post a Comment

How twins evaded arrest for long time

How twins evaded arrest for long time TIMES OF INDIA NEW DELHI   25.09.2024  On Sept 21, a woman was purchasing fruits at Burari Chowk when ...