Tuesday, October 2, 2018


நீதிபதி மனைவிக்கு, 'அல்வா'


Added : அக் 02, 2018 02:10


சுப்ரீம் கோர்ட் நீதிபதி தீபக் மிஸ்ரா மனைவிக்கு, அல்வா மற்றும் மல்லிகை பூ அனுப்ப முயன்ற, இந்து மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.'திருமணமான ஆண் மற்றும் பெண் தகாத உறவு வைத்துக் கொண்டால் தவறில்லை' என, சில தினங்களுக்கு முன், சுப்ரீம் கோர்ட் நீதிபதி தீபக் மிஸ்ரா தீர்ப்பு வழங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று, விழுப்புரம் மாவட்ட இந்து மக்கள் கட்சி சார்பில், சுப்ரீம் கோர்ட் நீதிபதி தீபக் மிஸ்ரா மனைவிக்கு, அல்வா மற்றும் மல்லிகை பூ அனுப்பும் போராட்டம் நடத்தினர்.விழுப்புரம் தலைமை தபால் நிலையத்தில், நேற்று மாலை, 3:45 மணிக்கு, இந்து மக்கள் கட்சி மாநில அமைப்பு குழு தலைவர் ஆசைத்தம்பி தலைமையில், நிர்வாகிகள் திரண்டனர்.பின், தங்கள் கையில், 'திருமதி தீபக் மிஸ்ரா' என எழுதப்பட்ட தபால் கவரின் உள் அல்வா, மல்லிகை பூ வைத்து விரைவு தபால் அனுப்ப, தபால் அலுவலகத்தில் நுழைந்தனர்.முன்னதாக, அங்கு குவிக்கப்பட்டிருந்த விழுப்புரம் டவுன் போலீசார், ஆசைத்தம்பி உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024