Saturday, October 6, 2018

டாக்டர்கள் விடுப்பு எடுக்க தடை விதிப்பு

Added : அக் 05, 2018 23:38

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அரசு டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, மருத்துவக் கல்வி இயக்குனர்எட்வின்ஜோ கூறியதாவது:'ரெட் அலர்ட்' எதிரொலியாக அனைத்து மருத்துவ மனைகளையும் தயார் நிலையில் இருக்கவும், மருந்துகள், படுக்கைகள் என, அனைத்து தேவைகளையும் தயார் நிலையில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.மழையால், பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க, போதிய டாக்டர்கள் உள்ளனர். அதிக நோயாளிகள் வரும் பட்சத்தில், சிகிச்சை அளிக்க வசதியாக, 7, 8ம் தேதிகளில், டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ ஊழியர்கள் ஆகியோருக்கு, விடுமுறை கிடையாது என, உத்தரவிடப்பட்டுள்ளது.தேவை கருதி, அனைத்து டாக்டர்களும் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024