இரண்டு நாட்களாக விமான சேவை ரத்து
Added : அக் 06, 2018 02:44
புதுச்சேரி, தொடர் மழை காரணமாக, புதுச்சேரிக்கு வந்து செல்லும் ஹைதராபாத்,பெங்களூர் ஸ்பைஸ் ஜெட் விமான சேவைகள் கடந்த இரண்டு நாட்களாக ரத்து செய்யப்பட்டது.புதுச்சேரியில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. இதனால் ஹைதராபாத், பெங்களூரில் இருந்து புதுச்சேரி வந்து செல்லும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் விமானங்கள் நேற்று முன்தினம் மற்றும் நேற்றும் ரத்து செய்யப்பட்டன.இறங்கும் போது விமானங்கள் வானில் இருந்து பார்க்கும் போது ஐந்து கிலோ மீட்டர் துாரம் சுற்றளவு வரையுள்ள நிலப்பகுதிகள் ரன்வே உள்பட நன்றாக தெரிய வேண்டும், ஆனால் நேற்று முன்தினமும் மற்றும் நேற்றும்,புதுச்சேரியில் பெய்த மழை காரணமாக மூன்று கிலோ மீட்டர் சுற்றளவு வரைதான் தெரிந்துள்ளது. இதன் காரணமாக, புதுச்சேரிக்கு வரவேண்டிய இரு விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. ஹைதராபாத்தில் இருந்து 71 பயணிகள், பெங்களூரில் இருந்து 71 பயணிகள், வீதம் கடந்த இரண்டு நாட்களில் 284 பயணிகள் புதுச்சேரிக்கு வர வேண்டியர்கள் பாதிக்கப்பட்டனர்.புதுச்சேரியில் இருந்து நேற்று முன்தினம் ஹைதராபாத்திற்கு 53, பெங்களூருக்கு 63 பேர், நேற்று ஹைதராபாத்திற்கு 58,பெங்களூருக்கு 68 பேர் என மொத்தம் 222 பயணிகள் இங்கிருந்து செல்ல வேண்டியவர்கள். இவர்களில் சிலர் மட்டும் சென்னை விமான நிலையம் மூலம் தங்கள் பயணத்தை மாற்றி சென்றனர். மற்ற பயணிகள் பயண கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொண்டனர். விமான சேவை ரத்தானதால், புதுச்சேரி அரசிற்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.

No comments:
Post a Comment