Tuesday, October 16, 2018


மதுரை மருத்துவ கல்லூரி மாணவர்கள் தண்டனை குறைப்பு

Added : அக் 15, 2018 23:44

மதுரை: "மதுரை மருத்துவக் கல்லுாரியில் 'ராகிங்'கில் ஈடுபட்ட 19 மாணவர்களின் தண்டனை காலம் 45 நாட்களாக குறைக்கப்பட்டது," என டீன் மருதுபாண்டியன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:இக்கல்லுாரி எம்.பி.பி.எஸ்., முதலாமாண்டு மாணவர்களை, 'ராகிங்' செய்தது தொடர்பாக 19 சீனியர் மாணவர்கள் ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஓராண்டு விடுதிக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர், 'எதிர்காலம் கருதி அவர்களை மன்னிக்கும்படியும், மீண்டும் தவறு செய்யமாட்டார்கள்,' என உறுதி மொழிக் கடிதம் அளித்தனர். முதலாண்டு மாணவர்கள் இருவரிடமும் மன்னிப்பது குறித்து கருத்து கேட்கப்பட்டது. 'அவர்களை மன்னிப்பதில் ஆட்சேபனை இல்லை,' என கருத்து தெரிவித்தனர்.இதையடுத்து தண்டனை காலம் 45 நாட்களாக குறைக்கப்பட்டது. இதனால் வரும் 18ம் தேதி முதல் அவர்கள் கல்லுாரிக்கு வர தகுதி பெறுகின்றனர். விடுதியில் தங்க ஓராண்டு தடை நீடிக்கிறது, என்றார்.

1 comment:

  1. UPSEE Application Form 2019 will be online mode and it will be available by 1st week of January 2019. Uttar Pradesh Technical University will released UPSEE 2019 Application from. Candidates can download application from from the official site.
    know more about UPSEE Application From online

    ReplyDelete

NEWS TODAY 25.12.2024