பாலிசிதாரர் சர்க்கரை நோயால் இறந்தாலும் காப்பீட்டுத் தொகை வழங்கணும்! எல்ஐசி-க்கு `செக்' வைத்த தேசிய ஆணையம்
ராம் பிரசாத்
பாலிசிதாரர் சர்க்கரை நோயால் இறந்தாலும், அவரது குடும்பத்துக்கு எல்.ஐ.சி நிறுவனம் ரூ.5 லட்சம் காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என தேசிய குறைதீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
எல்.ஐ.சி நிறுவனத்துக்கு எதிராக தேசிய குறைதீர்ப்பு ஆணைத்தில் சண்டிகரைச் சேர்ந்த நீலம் சோப்ரா என்பவர் தொடர்ந்த வழக்கில் அவருக்கு சாதகமாகத் தீர்ப்பு வந்துள்ளது. சர்க்கரை நோயால் அவதிப்பட்டுவந்த நீலம் சோப்ராவின் கணவர், கடந்த 2003-ம் ஆண்டு காப்பீட்டுத் தொகை பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளார். அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. 2004-ம் ஆண்டு, அவர் மாரடைப்பால் இறந்துவிட்டார். கணவரின் மரணத்தையடுத்து, காப்பீடு தொகையைப் பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவரது இன்சூரன்ஸ் காலாவதியாகிவிட்டது எனக் கூறி, எல்.ஐ.சி நிறுவனம் மறுத்துவிட்டது.
இதுதொடர்பாக நீலம் சோப்ரா, தேசிய குறைதீர்ப்பு ஆணையத்தில் முறையிட்டார். இதை விசாரித்த ஆணையம், மாரடைப்பால் உயிரிழந்த நீலம் சோப்ராவின் கணவருக்கு அவரது இறப்புக்கு 5 மாதங்களுக்கு முன்புதான் இந்தப் பிரச்னை இருந்துள்ளது. அவர் காப்பீடுக்காக விண்ணப்பித்தபோது இந்தப் பிரச்னைகள் இல்லை. 2003-ம் ஆண்டு காப்பீடு கோரும்போது, சர்க்கரை நோய் கட்டுக்குள் இருந்தது தெளிவாக உள்ளது. அதனால், காப்பீட்டாளர் தனக்கு இருந்த நோய்குறித்த விவரங்களை மறைத்துவிட்டார் எனக் கூற காப்பீடு நிறுவனத்துக்கு உரிமை இல்லை.
பாலிசிதாரர், தனக்கு இருக்கும் நோய்குறித்த விவரங்களை மறைத்திருந்தாலும், அது இறப்புக்குக் காரணமாக அமையாது. இறப்புக்கு நேரடியான தொடர்பு இல்லாதபோது, அதைவைத்து காப்பீட்டுத் தொகை கேட்க முடியாது என நிறுவனம் கூறுவதை ஏற்க முடியாது என்று முற்றிலும் மறுக்கக் கூடாது. எனவே, இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்; ஈட்டுத் தொகையாக ரூ.25,000 வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், நீதிமன்றச் செலவு ரூ.5,000 ஆகியவற்றை 45 நாள்களுக்குள் சண்டிகர் கிளையில் செலுத்த வேண்டும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment