Monday, October 15, 2018


சின்மயி புகார் உள்நோக்கம் கொண்டது; வழக்கு தொடர்ந்தால் சந்திக்கத் தயார்: கவிஞர் வைரமுத்து விளக்கம்

Published : 15 Oct 2018 08:42 IST

சென்னை



வைரமுத்து - THE HINDU

பாடகி சின்மயி புகாரில் உள்நோக்கம் உள்ளது என்றும், குற்றம்சாட்டியவர்கள் வழக்கு தொடர்ந்தால் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

பெண்கள் தங்களுக்கு ஏற் பட்ட பாலியல் ரீதியான துன் புறுத்தல்களை பொதுவெளியில் அம்பலப்படுத்தும் வகையில் ‘மீ டூ' (நானும் தான்) என்ற ஹேஷ்டேக் பிரச்சார இயக்கம் ட்விட்டரில் நடந்து வருகிறது. மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சரும், மூத்த பத்திரிகையாளருமான எம்.ஜே. அக்பர், பிரபல இந்தி நடிகர் நானா படேகர் உள்ளிட்ட அரசியல், திரையுலகம், ஊடகம் என பல்துறை பிரபலங்கள் மீது பாலியல் புகார்கள் குவிந்து வருகின்றன.

‘மீ டூ' ஹேஷ்டேக் மூலம் கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் புகார் கூறியது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு பதிலளித்த வைரமுத்து, ‘அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகி றது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத் தப்பட்டு வருகிறேன். அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை. உண்மையை காலம் சொல்லும்' என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஊடகங்களுக்கு பேட்டியளித்த சின்மயி, ‘‘கவிஞர் வைரமுத்து மீது வழக்கு தொடர்வது குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருகிறேன். நான் தனிநபர் இல்லை. என் பின்னால் ஏராளமான பெண்கள் இருக் கிறார்கள். நீதி கிடைக்கும்வரை போராடுவேன்'' என தெரிவித் திருந்தார்.

இதைத் தொடர்ந்து வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில், ‘‘என் மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் எல்லாம் முழுக்க முழுக்க பொய்யானவை. முற்றிலும் உள்நோக்கம் உடையவை. அவை உண்மையாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் என் மீது வழக்கு தொடுக்கலாம். சந்திக்க காத்திருக்கிறேன்.

மூத்த வழக்கறிஞர்களோடும், அறிவுலகத்தின் ஆன்றோர் களோடும் கடந்த ஒரு வாரமாக ஆழ்ந்து ஆலோசித்து வந்தேன். அசைக்க முடியாத ஆதாரங்களை தொகுத்து திரட்டி வைத்திருக் கிறேன். நீங்கள் வழக்கு போடலாம். சந்திக்க காத்திருக்கிறேன்.

நான் நல்லவனா, கெட்டவனா என்று இப்போது யாரும் முடிவு செய்ய வேண்டாம். நீதிமன்றம் சொல்லட்டும் நீதிக்கு தலை வணங்குகிறேன்'' என தெரிவித் துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024