Monday, October 15, 2018


தாமிரபரணியில் மகா புஷ்கர விழா: முஸ்லிம்கள் புனித நீராடி கூட்டு பிரார்த்தனை 

Published : 15 Oct 2018 08:52 IST

திருநெல்வேலி 



தாமிரபரணி மகா புஷ்கர விழாவை யொட்டி விடுமுறை தினமான நேற்று திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலுள்ள தீர்த்தக் கட்டங்களில் திரளான பக்தர்கள் புனித நீராடினர். திருநெல்வேலி அருகே மேலச்செவலில் முஸ்லிம் களும் ஆற்றில் நீராடி கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11-ம் தேதி தொடங்கியது. நான்காம் நாளான நேற்று அதிகாலையில் இருந்தே தீர்த்தக் கட்டங்களில் புனித நீராட திரளான பக்தர்கள் குடும்பத்தினருடன் திரண்டு வந்தனர். விடுமுறை தினம் என்ப தால் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் குவிந்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கிய தீர்த்தக் கட்டங் களான பாபநாசம், திருப்புடை மருதூர், அத்தாளநல்லூர், கோடகநல்லூர், திருநெல்வேலி சந்திப்பு தைப்பூச மண்டபம், குறுக்குத்துறை, ஜடாயு தீர்த்த படித்துறைகள் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு, வைகுண்டம், ஆழ்வார்திருநகரி உள்ளிட்ட படித்துறைகளில் அவர்கள் புனித நீராடினர்.

சைவ மாநாடு

அகில பாரத துறவியர்கள் சங்கம் சார்பில் பாபநாசத்தில் நேற்று திருவாசகம் முற்றோதுதல், சைவ மாநாடு நடைபெற்றது. இதில் குறிஞ்சி ஆதீனம் சிவதிருப்பதி தேசிக பரமாச்சார்ய சுவாமி, சித்த ஆகம ஆராய்ச்சியாளர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முஸ்லிம்களும் பங்கேற்பு

திருநெல்வேலி அருகே உள்ள மேலச்செவல் கிராமத்தில் முஸ்லிம் ஜமாத்தை சேர்ந்தவர்கள் அப்பகுதி இந்துக்களுடன் சேர்ந்து புஷ்கர விழாவில் பங்கேற்றனர். வெளி மாவட்டங்களில் வேலை பார்க்கும் இந்த கிராமத்தை சேர்ந்த முஸ்லிம்கள் ஏராளமானோர் இவ்விழாவில் பங்கேற்பதற்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர். 100-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தாமிரபரணி நதியில் நீராடி, ஆற்றங்கரை அருகில் கூட்டு பிரார்த்தனை நடத்தினர்.

இதேபோல் 50-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்களும் தாமிரபரணி நதியில் புனித நீராடினர்.

விழாவை முன்னிட்டு வாகனங் களின் வருகை தொடர்ந்து அதிகரித்ததால் திருநெல்வேலி மற்றும் பாபநாசம் பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024