விகடன் வாசகர் ஒருவருக்கு அவரது செல்போனிற்கு ஒரு அழைப்பு இன்று வந்துள்ளது. அதில் எதிர்முனையில் இருந்த நபர் நாங்கள் விசா கார்டு அலுவலகத்திலிருந்து பேசுகிறோம். உங்கள் கார்டின் எண்னை சொல்லுங்கள் என்று கூறிவிட்டு உங்கள் சொல்போனிற்கு வரும் OTP எண்ணையும் தெரியப்படுத்துங்கள் என்று கூறியுள்ளனர்.
இவரும் நம்பி வங்கியிலிருந்து தான் அழைக்கிறார்கள் என்று நம்பி தகவல்களை தந்துள்ளார்.அதன் பின் தான் மோசடியின் பின்புலம் புரியவந்துள்ளது
பின்னர் சுதாரித்து இது வங்கியிலிருந்து வந்த அழைப்பா? என்று சரி பார்க்க வங்கியை அணுகிய போது நாங்கள் எதுவும் இது போன்ற அழைப்புகளை உங்களுக்கு செய்யவில்லை மற்றும் விசா அலுவலகமும் இது போன்ற சரிபார்த்தல் எதையும் செய்யாது என்று கூறியுள்ளனர்.
அதனால் உடனடியாக கார்டை ப்ளாக் செய்து இந்த மோசடியிலிருந்து தப்பியுள்ளார் அந்த வாசகர்.
இன்னொருவருக்கு முதலில் ஒரு செல்போன் அழைப்பு வந்துள்ளது.அதில் உங்களுக்கு பரிசு ஒன்று காத்திருக்கிறது இந்த இணைப்பு துண்டிக்கப்பட்டவுடன் வரும் வாய்ஸ் காலில் உங்கள் தகவல்களை பதிவு செய்தால் பரிசு வீடு தேடி வரும் என்று கூறியுள்ளனர். அதே போல் அதில் அனைத்து தகவல்களையும் ஐவிஆர் மூலம் அளித்துள்ளார். இதில் வங்கி கணக்கு விவரமும் அடங்கும். அவர் கணக்கிலிருந்து 6000 ரூபாய்க்கு மேல் பிடிக்கப்பட்டு வெறும் 500 ரூபாய் மதிப்புள்ள பொருள் பரிசாக வீட்டிற்கு வந்துள்ளது.
இது போன்ற நூதன திருட்டுகள் சமீபத்தில் அதிகரித்து வருகிறது. இதனை கவனிக்காமல் விட்டால் உங்கள் பணம் பறிபோக வாய்ப்புள்ளது என்பதால் மக்கள் யார் உண்மை? யார் பொய்யானவர்கள் என கண்டறிவதில் குழப்பம் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இப்படிப்பட்ட மோசடிகளில் இருந்து தப்புவது எப்படி?
1.முதலில் வங்கியை அணுகி இது போன்ற அழைப்புகள் உண்மையா என பாருங்கள். அவர்கள் சொல்லுவது தான் உணமை என்பதால் வங்கியின் அதிகாரப்பூர்வ எண்ணுக்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறுங்கள்.
2.இது போன்ற நபர்கள் உங்களை அவசரப்படுத்த வாய்ப்புண்டு. அடுத்த நிமிடத்திலேயே வாய்ஸ் காலை அனுப்பி உங்களை கவர வாய்ப்புள்ளது என்பதால் பொறுமையாக முடிவெடுங்கள். எந்த ஐவிஆரையும் முழுமையாக நம்பி தகவல்களை அளித்து விடாதீர்கள்.
3.கூடிய மட்டில் உங்கள் வீட்டு கணினி அல்லது அலுவலகத்தில் நீங்கள் மட்டும் பயன்படுத்தும் கணினியை மட்டும் பணப்பரிமாற்றத்துக்கு பயன்படுத்துங்கள் இல்லையெனில் உங்கள் வங்கி தகவல்களை மற்றவர்கள் திருட வாய்ப்பு அதிகமாக உள்ளது.
தற்போது இதுபோன்ற மோசடிகள் வளர்ந்து வருவதால் முன் பின் தெரியாத வங்கி என்று பொய் கூறி ஏமாற்றும் நிறுவனங்களிடம் தகவல்களை கொடுத்து ஏமாறாமல் விழிப்பு உணர்வோடு செயல்படுங்கள்.
No comments:
Post a Comment