Wednesday, October 22, 2014

உண்மைத் தன்மை சான்றிதழ் தபாலில் அனுப்ப தடை : தேர்வுத்துறை அறிவிப்பு


சென்னை : தீபாவளி பண்டிகையை கொண்டாட, கணிசமானோர் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டதால், சென்னை நகரம் வெறிச்சோடி காணப்படுகிறது. சாலைகளில் வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை யில் தங்கி பணிபுரிவோர், குடும்பத்துடன் வசிப்போர், தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இன்று பண்டிகை என்பதாலும், தொடர்மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதாலும், கணிசமானோர் குடும்பத்துடன், கடந்த சில தினங்களுக்கு முன்பே நகரில் இருந்து புறப்பட்டு விட்டனர். நேற்று பெரும்பாலான தனியார் அலுவலகங்கள் மதியத்திற்கு மேல் இயங்கவில்லை. நாளை, நாளை மறுநாள் விடுப்பு எடுத்தால், சனி, ஞாயிற்றுக்கிழமைகளையும் சேர்த்து, சொந்த ஊரில் இருக்கலாம் என்ற நிலையில், வரும், 27ம் தேதி தான் மீண்டும் சென்னை இயல்பு நிலைக்கு திரும்பும். அதுவரை நகர சாலைகளில் நெரிசல் குறைந்து வெறிச்சோடிய நிலையிலேயே காணப்படும். இதற்கிடையே, தொடர்மழை காரணமாக கூட்டம் குறைவாக காணப்பட்ட தி.நகர் வணிக வளாகங்கள், ஜவுளி கடைகளில் நேற்று முன்தினம் மாலை முதல் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நேற்று மாலை முதல் அங்கும் கூட்டம் குறைய துவங்கியது.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...