Monday, October 20, 2014

திருப்பதி தேவஸ்தான அறைகள்: இணையதளம் மூலம் முன்பதிவு !





திருப்பதி: திருப்பதி  தேவஸ்தான வாடகை அறைகளை இணையதளம் மூலம்  முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி பேருந்து நிலையம் எதிரில் உள்ள ஸ்ரீனிவாசம், ரயில் நிலையம் எதிரில் உள்ள மாதவம் ஆகியவற்றில்  வாடகை அறைகள் உள்ளன. இந்த அறைகளை இணையதளம் மூலம்   முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை, 2015ஆம் ஆண்டு, ஜனவரி 1-ஆம் தேதி முதல் தேவஸ்தானம் தொடங்க உள்ளது.

தற்போது,  வரைவோலை அனுப்பி அறைகளை முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது. மேலும், ஈதர்ஷன் கவுன்டர்கள் மூலம், ரூ.75 கட்டண அறைகளை பக்தர்கள் நேரடியாக சென்றும்  முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்நிலையில், வரைவோலை மூலம் செய்யும் முன்பதிவை ரத்து செய்து, ஸ்ரீனிவாசம் வாடகை அறைகளில், தினமும் ரூ.200 கட்டணத்தில் 50 அறைகள் , ரூ.400ல் 20 அறைகள் , ரூ.600ல் (சிறப்பு சொகுசு அறை) 5 அறைகள் , மாதம் வாடகை அறைகளில், தினமும், ரூ.800ல் (ஏ.சி.) 20 அறைகள் , ரூ.1000 (சொகுசு ஏ.சி) 5 அறைகள் என மொத்தம் 100 அறைகள் உள்ளன. இந்த அறைகளை, இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024