மதுவை ருசிக்க தொடங்கி அதற்கு அடிமையாவோர் பெரியவர்கள் மட்டுமல்ல... சிறார்களும்தான். தற்போது புதுவையில் பல இடங்களில் பொது இடத்திலேயே மதுவை அவர்கள் அருந்த தொடங்கியுள்ளனர். குறைந்த விலையில் எளிதாக கிடைக்கும் மதுவும் இதற்கு ஓர் காரணம்.
சுற்றுலா பிரதேசமான புதுவை யில் கோயில்கள், கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்கள், படகு பயணம் என ஏராளமான அம்சங்கள் இருக்கின்றன. கூடவே, டீக்கடைகள் போல் மது பானக்கடைகள், பார்கள் வரிசை யாக பல இடங்களில் இருக்கிறது. புதுவையில் மட்டும் 260 மதுபான பார்கள் உள்ளன. தொடர்ந்து புதி தாக பல பார்களை அரசு தரப் பில் திறக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மது விற்பனை யும் ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது. இதனால், மது அருந் தும் நபர்களை பார்த்து வளரும் குழந்தைகளும் மதுவுக்கு அடிமையாக தொடங்கியுள்ளனர். புதுவையில் தற்போது கடற்கரை சாலை, பாரதி பூங்கா உட்பட பல இடங்களில் மதுபானத்தை சிறார்கள் அருந்துவதை தாராள மாக பார்க்க முடிகிறது.
மதுவுக்கு அடிமை
குழந்தைகள் நல தன்னார்வ அமைப்பினரை விசாரித்தபோது, “சாலையோர சிறார்கள்தான் மது அருந்துகிறார்கள் என்று நினைப் பது தவறு. 18 வயது பூர்த்தியடை யாத பல குழந்தைகள் மதுவை ருசித்து பார்த்து அடிமையாகி வருகின்றனர். அதை கண்காணிக் கும் பொறுப்பில் உள்ள பெற்றோ ரில் பலரும் மது அடிமைகளாக இருக்கிறார்கள்" என்று குறிப் பிட்டனர்.
மதுவின் மூலம் அடிமையாக் கப்படும் குழந்தைகளை தவறான வழிக்கு பயன்படுத்துவோரும் புதுவையில் அதிகரித்துள்ளனர். அண்மையில் பாலியல் தொழி லில் ஈடுபடுத்தப்பட்ட குழந்தை கள் போதைக்கு பழக்கப்படுத்தப் பட்டதாக போலீஸார் விசாரணை யில் தெரியவந்தது.
குழந்தைகளுக்கு மதுபானங் களை விற்கக்கூடாது என்ற சட்டம் புதுவையில் கடைபிடிக்கப் படுகிறதா என்று சந்தேகம் எழுந் துள்ளது. மதுவிற்பனை செய்யும் அரசு நிறுவனங்களே இதை செயல்படுத்துவதில்லை என புகார் கூறப்படுகிறது. கலால்துறை உயர் அதிகாரிகள் தரப்பில் கேட்டதற்கு, "புதுவையில் மது கடைகளில் சிறுவர்களுக்கு மது பானம் விற்கக்கூடாது என விற் பனையாளர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது" என்று தெரிவித்தனர்.
ஆனால், சமூக ஆர்வலர்களோ இதை மறுக்கின்றனர். கலால்துறை மதுபானக்கடைகளில் ஆய்வு நடத்துவதே இல்லை. கண்காணிப் பதும் இல்லை. கண்காணிப்பு நடவடிக்கைக்காக தனி குழுவே உள்ளது. அவர்கள் செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.
பெரியோர் தொடங்கி குழந்தை கள் வரை மதுவுக்கு அடிமையாகி வரும் சூழலில் புதுவையில் கலால் வருவாய் உயர்ந்து வருகிறது. இதுதொடர்பாக கலால்துறை தரப்பில் விசாரித்தபோது, ‘புதுவையில் கடந்த 2012-13ம் ஆண்டு கலால் வரியாக ரூ. 503 கோடி கிடைத்தது. அதே நேரத்தில் 2013-14ம் ஆண்டு கலால் வரியாக ரூ. 511 கோடி வசூலாகியுள்ளது. தமிழகத்தை விட மதுபான விலை இங்கு குறைவு. மேலும் பல மது பான பார்கள் தொடங்க அரசு முடிவு எடுத்துள்ளது' என்று தெரிவித்தனர்.
எனினும், மதுபானக்கடைகளை புதிதாக திறப்பதற்கு மக்கள் தரப்பில் எதிர்ப்பு வலுத்து வரு கிறது. பொதுமக்கள் சார்பில் பல இடங்களில் போராட்டங்களும் நடந்து வருகின்றன. இந்நிலையில் சட்டப்பேரவையிலும் மது பிரச்சினை எதிரொலித்தது.
“புதிய குடிகாரர்களை உருவாக் கவேண்டாம்” என்று எதிர்க்கட்சித் தலைவர் வைத்திலிங்கம் வலி யுறுத்தினார். முதல்வர் ரங்கசாமி, "மதுவிலக்கு செயல்பாட்டுக்கு வரும். கால அளவை தற்போது தெரிவிக்க இயலாது" என்று தெரி வித்துள்ளார். மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும் மதுவுக்கு எதிராக குரல்கள் எழுந்துள்ளது நல்ல தொடக்கமாகும்.
No comments:
Post a Comment