இலங்கையை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் கூறும்போது, "வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது.
இலங்கையை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள வளிமண்டலத்தில் புதன்கிழமை இரவு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்தம், இன்று அதே இடத்தில் நிலைகொண்டிருந்தது.
இதன் காரணமாக தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிக கன மழையும், சில இடங்களில் கன மழையும் பெய்யும். வடதமிழகத்திலும் கன மழை பெய்யும்.
சென்னையில் விட்டுவிட்டு மழை பெய்யக்கூடும். ஏற்கெனவே அரபிக்கடல் பகுதியில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு நிலையும் அதே இடத்தில் நிலைகொண்டுள்ளது. இது மேலும் வலுவடைய வாய்ப்புள்ளது" என்று பாலசந்திரன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment