கடந்த மாதம் “கிரெடிட் கார்டு டிக்ளைன்” ஆனதால் ஓட்டலில் சாப்பிடதற்கு பணம் கொடுக்க முடியாமல் தவித்ததாக அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
கடந்த மாதம் நியூயார்க்கில் ஐ.நா. பொது சபை கூட்டம் நடைபெற்றபோது, தனது மனைவி மிஷேல் ஒபாமாவுடன் ஹோட்டல் ஒன்றுக்கு ஒபாமா சாப்பிட சென்றார். சாப்பிட்டு முடித்ததும் சர்வர் பில்லுடன் வந்தார். அவரிடம் தனது கிரெட் கார்டை ஒபாமா கொடுத்தனுப்பினார். சிறிது நேரத்தில் திரும்பி வந்த சர்வர், உங்கள் கார்டு “டிக்ளைன்” ஆகி விட்டது என்று கூறி கார்டை திரும்ப அளித்தார். இது ஒபாமாவுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைத்தது.
இதையடுத்து மிஷேல் ஒபாமா தனது கிரெட் கார்டை கொடுத்து பணத்தை செலுத்தினார்.
இது தொடர்பாக அமெரிக்க நிதித்துறை நுகர்வோர் புகார் அமைப்பிடம் ஒபாமா புகார் அளித்தார். அந்த கிரெடிட் கார்டை நான் அதிகம் பயன்படுத்துவது இல்லை என்பதால் கார்டு ஏற்க மறுக்கப்பட்டிருக்கலாம் என்று நினைத்தேன் என்று ஒபாமா கருத்துத் தெரிவித்துள்ளார்.
எனினும் இது தொடர்பாக நிதித்துறை அளித்துள்ள விளக்கத்தில் அதிபருக்கு அளிக்கப்பட்ட கிரெடிட் கார்டு டிக்ளைன் ஆக வாய்ப்பு இல்லை. இதில் ஏதோ எமாற்று வேலை நடைபெற்றுள்ளது. அவரது கார்டை முடக்கும் வகையில் சில விஷமிகள் மென்பொருள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மோசடிகள் அமெரிக்காவில் அதிகம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சுமார் 100 மில்லியன் அமெரிக்கர்கள் பாதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment