தை அமாவாசையையொட்டி, காசி, கயா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வரும் வகையில், சிறப்பு சுற்றுலா ரயிலை, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.,) ஏற்பாடு செய்துள்ளது.இதுகுறித்து, ஐ.ஆர்.சி.டி.சி., கூடுதல் பொது மேலாளர் ரவிகுமார் கூறியதாவது:வரும் 17ம் தேதி, மதுரையில் புறப்படும் சுற்றுலா ரயில், சென்னை சென்ட்ரல் வழியாக, காசி, கயா, அலகாபாத், ஹரித்துவார் ஆகிய இடங்களுக்கு சென்று, 27ம் தேதி திரும்புகிறது. தை அமாவாசை தினமான, 20ம் தேதி, கயாவில், மூத்தோர் திதி கொடுக்க வசதி செய்யப்படும்.சுற்றுலா செல்ல, 10,010 ரூபாய்; 21,670 ரூபாய்; 29,150 ரூபாய் என, மூன்று வித கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஓட்டலில் தங்கும் வசதி, சுற்றிப் பார்க்க வாகன வசதி, உணவு, சுற்றுலா தகவலர் ஆகியவை கட்டணத்திற்குள் அடங்கும். தகவல்களுக்கு, 98409 02916 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.நமது நிருபர்
No comments:
Post a Comment