Saturday, April 4, 2015

உத்தரப் பிரதேசத்தில் தேர்வைக் கண்காணிக்க வந்த பறக்கும் படையினரை நாய்களை ஏவி விரட்டிய கல்லூரி நிர்வாகம்

உத்தரப்பிரதேசத்தில் கல்லூரித் தேர்வைக் கண்காணிக்க வந்த பறக்கும் படையினர் நாய்களை ஏவி விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

பிஹார் மாநில பள்ளிப் பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பெற்றோர்களும் உறவினர்களும் கட்டிடத்தில் ஏறி விடையெழுதிய துண்டுச் சீட்டுகளை (பிட்) கொடுக்கும் புகைப்படம் ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத் தியது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் பெரோஸாபாத் சிர்ஸாகஞ் சில் ஒரு கல்லூரியில் நடந்த தேர்வைக் கண்காணிக்க வந்த பறக்கும் படை யினர் நாய்களை ஏவி விரட்டியடிக் கப்பட்டுள்ளனர்.

ஆக்ரா அம்பேத்கர் பல்கலைக் கழகத்தின் கீழ் இயக்கும் யதுநாத் சிங் மகா வித்யாலயா கல்லூரியில் தேர்வுகள் நடந்து வருகின்றன. இத்தேர்வைக் கண்காணிக்க கடந்த திங்கள்கிழமை பறக்கும்படையினர் சென்றுள்ளனர். அவர்கள் மீது 20-க்கும் மேற்பட்ட நாய்கள் ஏவப்பட்டு, விரட்டியடிக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக பறக்கும் படைக்கு தலைமை வகித்த பேராசிரியர் ராஜேந்திர சர்மா ‘தி இந்து’விடம் கூறியதாவது:

அக்கல்லூரிக்குச் சென்றபோது, செல்லும் வழியில் உள்ள குறுகலான பாதைகளில் இருசக்கர வாகனங் களை குறுக்காக நிறுத்தி தாமதப் படுத்தினர். கல்லூரிக்குச் சென்ற போது, பிரதான வாயில் உட்பக்க மாகப் பூட்டப்பட்டிருந்தது. அதைத் திறக்க அரை மணி நேரம் தாமதம் செய்தனர். பிறகு உள்ளே நுழைந்த பறக்கும்படையினர் மீது 20-க்கும் மேற்பட்ட நாய்கள் ஏவி விடப்பட்டன.

இதனால், அங்கிருந்து பறக்கும் படையினர் அலறியடித்து ஓடிவந் துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விடைத்தாள்களைச் சோதனை செய்து பார்த்தபோது, பெரும் பாலானவை ஓர் எழுத்துகூட மாறாமல் ஒன்றுபோலவே அனைத்தும் இருந் துள்ளன. தேர்வு கண்காணிப்பாளர் களே விடைகளை உரக்கப் படித்துள் ளனர். அதனைக் கேட்டு மாணவர்கள் எழுதியுள்ளனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால், அக் கல்லூரியின் அனைத்துத் தேர்வுகளை யும் ரத்து செய்ய உத்தரவிடப்பட் டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இதுவரை வழக்கு பதிவு செய்யப் படவில்லை. அக்கல்லூரி மீது அம்பேத்கர் பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பார்த்து எழுத ரூ.50 கோடி

உத்தரப்பிரதேசத்தில் 10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் பார்த்து எழுதுவதற்கு பணம் வாங்கிக் கொண்டு உதவுவதற்காக அலிகர் பகுதியில் ஒரு கும்பலே இயங்கி வருகிறது.

இந்த மாபியாக்களிடம் குறிப்பிட்ட தொகையைக் கட்டணமாகச் செலுத்தி விட்டால், கேள்விக்கான விடையைத் தயார் செய்து கொடுப்பது முதல், திடீர் சோதனைகளில் இருந்து தப்பிக்கச் செய்வது வரை அனைத்தையும் அக்கும்பல் கவனித்துக் கொள்ளும்.

அத்ரோலி தாலுகாவில் மட்டும் மாணவர்கள் விடையைப் பார்த்து எழுத உதவுவதற்காக ரூ.50 கோடி கைமாறியதாக கடந்த 2013-ம் ஆண்டு உள்ளூர் பத்திரிகைகளில் செய்தி வெளியானது.

அத்ரோலி பகுதி பள்ளிகளில் சேர்க்கை கிடைத்தால் போதும், தேர்ச்சி பெறுவது ஒரு விஷயமே இல்லை என்பதால், பணம் கொடுத்து தேர்ச்சி பெறுவதற்காக கோவா, மகாராஷ் டிரம், குஜராத், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகம் மற்றும் காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் அத்ரோலி பள்ளிகளில் சேர்கின்றனர்.

கடந்த 2013-ம் ஆண்டு இக்லாஸ் தாலுகாவில் லட்சுமா வித்யா நிகேதன் இன்டர் காலேஜுக்கு வெளியே, பார்த்து எழுத உதவும் இரு கும்பல் துப்பாக்கிகளுடன் மோதிக் கொண் டன. அதனைத் தடுக்க முயன்ற ராணுவ வீரர் தேஜ்வீர்சிங் துப்பாக்கியால் சுடப் பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

IIM-I partners with 2 foreign varsities for dual degree

IIM-I partners with 2 foreign varsities for dual degree  TIMES NEWS NETWORK 19.09.2024  Indore : Indian Institute of Management, Indore, (II...