Tuesday, August 22, 2017

பன்னீருக்கு பழைய அறை!

பதிவு செய்த நாள்
ஆக 22,2017 02:03



சென்னை: துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள பன்னீர்செல்வத்திற்கு, அவர், ஏற்கனவே முதல்வராக இருந்த போது பயன்படுத்திய அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜெ., அமைச்சரவையில், நிதி அமைச்சராக பன்னீர்செல்வம் இருந்த போது, அவருக்கு, சென்னை, தலைமை செயலகம், முதல் தளத்தில், அறை ஒதுக்கப்பட்டிருந்தது. முதல்வரான போதும், அதே அறையை அவர் பயன்படுத்தினார். தற்போது, அந்த அறை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையனுக்கு தரப்பட்டுள்ளது.

துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள பன்னீர் செல்வத்திற்கு, மீண்டும் அதே அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறையில், நேற்று துணை முதல்வராக, பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். அவருக்கு, முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அமைச்சர் செங்கோட்டையனுக்கு, அதே தளத்தில், வேறு அறையும், புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பாண்டியராஜனுக்கு, மூன்றாவது தளத்தில் உள்ள அறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. அவரும், நேற்று அமைச்சராக பொறுப்பேற்றார்.

No comments:

Post a Comment

Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 TAMILNADU India Tamil Nadu Government Servants (Conditions of Service) Act,...