புதிதாக 300 காஸ் ஏஜன்சிகள் : எண்ணெய் நிறுவனங்கள் முடிவு
பதிவு செய்த நாள்22ஆக
2017
02:26
சமையல், காஸ் சிலிண்டர்களை விரைவாக சப்ளை செய்ய, கிராமங்களில் அதிக ஏஜன்சிகள் நியமிக்க, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
தமிழகத்தில், இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்களுக்கு, வீடு, வணிக பயன்பாடு என, 1.90 கோடி சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு, மூன்று பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களும், 1,084 காஸ் ஏஜன்சிகள் மூலம் சிலிண்டர்கள் சப்ளை செய்கின்றன.
கிராமங்களில் வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்பங்களுக்கு, இலவசமாக காஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி உள்ளார். அதனால், காஸ் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து உள்ளது.
இது குறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: பெட்ரோலிய அமைச்சக அனுமதி படி, தமிழகத்தில், புதிதாக, 300 காஸ் ஏஜன்சிகள் நியமிக்கப்பட உள்ளன. அவற்றில், பெரும்பாலானவை கிராமங்களில் நியமிக்கப்பட உள்ளன. இதுவரை, ஆவணங்களை சரி பார்த்து, தகுதியான விண்ணப்பங்களை தேர்வு செய்து, பின், குலுக்கல் முறையில் காஸ் ஏஜன்சிகள் தேர்வு செய்யப்பட்டன. இனி, குலுக்கல் தவிர, மற்ற அனைத்து பணிகளும் இணையதளத்தில் மேற்கொள்ளப்படும். ஏஜன்சி உரிமம் பெறுவதற்கான வயது, 21 - 45 வரை இருந்தது; தற்போது, 60 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. புதிய ஏஜன்சிகள் துவக்கிய பின், புதிய வாடிக்கையாளர்களுக்கும், கிராமம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும், துரிதமாக சிலிண்டர் சப்ளை செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
கமிஷன் எவ்வளவு? : எண்ணெய் நிறுவனங்கள், காஸ் ஏஜன்சி நடத்துவோருக்கு, வீட்டு சிலிண்டருக்கு, தற்போது, 47 ரூபாயும், வணிக சிலிண்டருக்கு, 86 ரூபாயும் கமிஷனாக வழங்குகின்றன.
- நமது நிருபர் -

No comments:
Post a Comment