Wednesday, August 23, 2017

சின்னசேலம் அருகே மோதிக்கொண்ட ரயில் - டிராக்டர்! - உயிர் தப்பிய 300 பயணிகள்




சின்னசேலம் அருகே பயணிகள் ரயில், டிராக்டர் மீது மோதியதில் ரயில் இன்ஜின் முற்றிலும் சேதமடைந்தது. மேலும் இந்த விபத்தில் டிராக்டர் டிரைவர் உள்பட ரயிலில் பயணம் செய்த 300-க்கும் மேற்பட்ட பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

சேலத்தில் இருந்து ஆத்தூர், சின்னசேலம் வழியாக விருத்தாசலத்துக்கு இரண்டு பயணிகள் ரயில் இயங்கி வருகின்றன. இன்று காலை
9.30 மணி அளவில் சேலத்தில் புறப்பட்ட பயணிகள் ரயில் 11.10 மணியளவில் சின்னசேலம் அருகே தென்பொன்பரப்பி பகுதியிலுள்ள ஆளில்லா ரயில்வே கிராஸிங்கைக் கடக்க முயன்றது. அப்போது, அந்த வழியாக மண் அள்ளிக்கொண்டு வந்த டிராக்டர் அதிவேகமாக தண்டவாளத்தைக் கடந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ரயில் மீது டிராக்டர் மோதியது. இந்தச் சம்பவத்தில் ரயில் இன்ஜினின் முன்பாகம் முற்றிலும் சேதமடைந்து, சுமார் 100 மீட்டர் தூரம் சென்று ரயில் நின்றுவிட்டது.

இந்த விபத்தில் இன்ஜினில் இருந்த டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ரயிலில் பயணித்த 300 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் இரண்டு மணி நேரம் ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சின்னசேலம் தாசில்தார் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் கமலக்கண்ணன், ஆர்.ஐ பாலசுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று பயணிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தனர். விபத்து குறித்து தீவிர விசாரணை நடந்துவருகிறது.
Dailyhunt

No comments:

Post a Comment

Termination Of Employee For A Single Clerical Mistake In Entire Service Career 'Excessive', Minor Penalty Could Be Imposed: MP High Court

Termination Of Employee For A Single Clerical Mistake In Entire Service Career 'Excessive', Minor Penalty Could Be Imposed: MP High ...