Tuesday, August 22, 2017

இன்று, 'நீட்' விசாரணை: மாணவர்கள், 'திக்... திக்...'

பதிவு செய்த நாள்22ஆக
2017
05:33




மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான, 'நீட்' தகுதித் தேர்வு தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் முடிவை அறிய, மாணவர்கள் மற்றும் பெற்றோர் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

தமிழகத்தில், 'நீட்' தேர்வு குழப்பத்தால், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கை தடைபட்டு உள்ளது. 'நீட்' தேர்வில் இருந்து, இந்தாண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்கும், தமிழக அரசின் சட்ட மசோதாவுக்கு, மத்திய அமைச்சகங்கள் அனுமதி அளித்து விட்டன.

ஆனாலும், 'நீட்' தேர்வை ஆதரிக்கும் மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் மாணவர்கள் சேர்க்கையை நடத்த இடைக்கால தடை விதித்து உள்ளது. இதனால், ஜனாதிபதி ஒப்புதல் கிடைப்பது சிக்கலாகி உள்ளது.

இந்நிலையில், மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு வருவது மாணவர்கள், பெற்றோரிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது போல, மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும், 'நீட்' தகுதி தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், மாணவர் சேர்க்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, அரசு மருத்துவ கல்லுாரிகளுக்கு, 2,653 கூடுதல் இடங்கள் ஏற்படுத்தி கொள்ள, எம்.சி.ஐ., என்ற, இந்திய மருத்துவ கவுன்சிலிடம் அனுமதி கோரப்பட்டு உள்ளது.

அதற்கான கட்டமைப்பு வசதிகள் உள்ளன. இருப்பினும், எம்.சி.ஐ., கள ஆய்வு செய்து பரிந்துரைத்தால், தேவையான கட்டமைப்பு மற்றும் பேராசிரியர் வசதிகள் மேம்படுத்தப்பட்டு விடும் என்பதை, தமிழக அரசு தங்களது வாதத்தில் முன் வைக்கும். நல்ல முடிவு கிடைக்கும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 TAMILNADU India Tamil Nadu Government Servants (Conditions of Service) Act,...