Tuesday, August 22, 2017


இன்ஜி., மாணவர் சேர்க்கை : அண்ணா பல்கலை கெடு
பதிவு செய்த நாள்
ஆக 22,2017 02:23



தனியார் இன்ஜி., கல்லுாரிகளில், வரும், 31ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை முடிக்க, அண்ணா பல்கலை கெடு விதித்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, நாடு முழுவதும், அனைத்து இன்ஜி., கல்லுாரிகளிலும், ஜூலை, 31க்குள், பி.இ., - பி.டெக்., மாணவர் சேர்க்கையை முடித்திருக்க வேண்டும். ஆக., 1ல், அனைத்து கல்லுாரிகளிலும் வகுப்புகள் துவங்கப்பட்டிருக்க வேண்டும். 'நீட்' நுழைவுத்தேர்வு பிரச்னையால், தமிழகத்தில், மருத்துவ மாணவர் சேர்க்கை தள்ளிப் போனதால், இன்ஜி., மாணவர் சேர்க்கை, தாமதமாக துவங்கியது.

ஆக., 18ல் கவுன்சிலிங் முடிந்துள்ளது. தொடர்ந்து, அண்ணா பல்கலை மற்றும் உறுப்பு கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்கி உள்ளன. 'தனியார் இன்ஜி., கல்லுாரிகளில், 50 சதவீத இடங்கள் காலியாக உள்ளன. இவற்றில், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை, வரும், 31ம் தேதிக்குள் நிரப்ப வேண்டும்' என, அண்ணா பல்கலை கெடு விதித்துள்ளது. செப்., 1ல், வகுப்புகள் துவங்கவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 TAMILNADU India Tamil Nadu Government Servants (Conditions of Service) Act,...