Saturday, November 4, 2017


காருடன் உரிமையாளர் கடத்தல்: போலீஸ் விசாரணை


தஞ்சாவூர்: கும்பகோணத்திலிருந்து, உரிமையாளருடன் காரை கடத்திய கும்பலை பிடிக்க, மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள ஸ்டாண்டில் வாடகைக்கு கார் ஓட்டி வருபவர், செந்தில்குமார், 53. கடந்த, 30ம் தேதி இரவு, 25 வயது மதிக்கத்தக்க இருவர், கடலுார் மாவட்டம், வடலுார் வரை, காரில் சென்று திரும்பி வர வேண்டும் என, கூறினர்.
இருவரையும், காரில் அழைத்துச் சென்ற செந்தில்குமார், அதன் பின் வீட்டிற்கு திரும்பி வரவில்லை; அவரது மொபைல் போனும், சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
செந்தில்குமார் மனைவி சந்திரா கொடுத்த புகார்படி, கும்பகோணம் மேற்கு போலீசார், மூன்று தனிப்படை அமைத்து, செந்தில்குமாரையும், காரையும் தேடி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளில், கும்பகோணத்தில் இருந்து கார்களை வாடகைக்கு எடுத்துச் செல்வது போல் நடித்து, டிரைவரை கட்டி போட்டு, ஆறு வாகனத்தை மர்ம நபர்கள் கடத்தி சென்றுள்ளனர்.
தற்போது, காருடன் கடத்தப்பட்ட செந்தில்குமாரின் மொபைல்போன் டவர், விருத்தாசலம் வரை காட்டுகிறது. அதன் பின், அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் சின்ன சேலம், வடலுார் வரை உள்ள பெட்ரோல் பங்க்குகளில் உள்ள, கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024