Saturday, November 4, 2017

மெரினா கடல் நீர் கறுப்பு நிறமானது ஏன்?

சென்னை:சென்னை, மெரினா கடற்கரை பகுதியில், கடல் நீர் கறுப்பு நிறமாக மாறி உள்ளது. இது, சென்னை மக்களிடம், சுனாமி பீதியை ஏற்படுத்தி உள்ளது.



இது குறித்து, அண்ணா பல்கலை, பருவநிலை மாற்றம் மற்றும் மேலாண்மை துறை பேராசிரியர், ராமச்சந்திரன் கூறியதாவது:

சென்னையில், ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. மழை நீர், கூவம், ஓட்டேரி நல்லா, கொற்றலை, அடையாறு வழியாக, கடலை அடைகிறது. அதில், கழிவுநீரும் குப்பையும்

கலந்தே வருகிறது. அதன் கறுப்பு நிற படிவுகள், அலையின் வழியே, கரையோரத்தில் படிகின்றன. அது, நீரின் வழியே பிரதிபலிக்கிறது.

தொடர்ந்து அலைகள் அடிப்பதாலும், மழை நீரில் கழிவுகள்குறைவதாலும், நீல நிறத்திற்கு மாறி விடும். இது, இயல்பானது தான். மக்கள் அச்சப்பட தேவை இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

தேசிய பேரிடர் மேலாண்மை முகமை அதிகாரி கூறியதாவது:

மெரினா முதல் பட்டினபாக்கம் வரையில், கரையை ஒட்டிய பகுதியில், கடல் நீர் கறுப்பு நிறமாக மாறி உள்ளது. ஆழத்தில் உள்ள நீர், வழக்கமான நீல நிறத் தில் உள்ளது.இதனால்,அச்சம் தேவையில்லை. மழையால், கூவம்,அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் போன்றவற்றில் தேங்கியிருந்த கழிவுநீர் முழுவதும், கடலுக்கு சென்றுள்ளது தான், இதற்கு காரணம்.

இதுவரை, 5 டி.எம்.சி., அளவிற்கு, மழைநீருடன்,கழிவுநீரும் கடலுக்கு சென்றிருக்க வாய்ப்பு உள்ளது. கடல் நீரின் அடர்த்தியை விட, மழை நீரின் அடர்த்தி குறைவு. இதனால், சேறு, சகதி யுடன் கலந்த மழை நீர், கரைகளில் ஒதுங்கி உள்ளது.அலைகளின் வேகத்தில், நாளடை வில் காணாமல் போய்விடும்.கடலுக்கு சென்று உள்ள, 5 டி.எம்.சி., நீரை சேமித்திருந்தால், சென்னையின் ஐந்து மாத குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024