நீதிபதியிடம் வாக்குவாதம் டிரைவருக்கு, 'ஜெயில்'
நவ 11, 2017 21:06
சென்னை, சென்னை, உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்த போது, நீதிபதியை எதிர்த்து பேசியவர், உடனடியாக கைது செய்யப்பட்டார்.சென்னை, கே.கே.நகரைச் சேர்ந்தவர், ஆல்ப்ரட், 60; அரசு போக்குவரத்து கழகத்தில், ஓட்டுனராக பணியாற்றி உள்ளார். இவர், 2007ல், பிரபல தனியார் நிறுவனத்தில், தவணை முறையில் கார் வாங்கி உள்ளார். அதற்குரிய பணத்தை செலுத்தவில்லை என, கூறப்படுகிறது. இதனால், அந்நிறுவனம், காரை பறிமுதல் செய்து விட்டது.இதை எதிர்த்து, அவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நேற்று முன்தினம், நீதிபதி, எம்.எஸ்.ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு, ௧௦ ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படுவதாக கூறிய ஆல்ப்ரட், நீதிபதிக்கு அவமரியாதை ஏற்படுத்தும் வகையில் பேசி உள்ளார்.இதையடுத்து, அவரை, நீதிமன்ற அவதிப்பு வழக்கில் கைது செய்ய, நீதிபதி உத்தரவிட்டார். உயர் நீதிமன்ற போலீசார், ஆல்ப்ரட்டை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment