Sunday, November 12, 2017

742 பேர் வக்கீல் தொழிலில் இருந்து இடைநீக்கம் பார் கவுன்சில் அதிரடி நடவடிக்கை



நவம்பர் 12, 2017, 01:15 AMதிறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற 742 பேரை வக்கீல் தொழிலில் இருந்து அதிரடியாக இடைநீக்கம் செய்து பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை,

சட்ட படிப்பை முடித்துவிட்டு வக்கீலாக பதிவு செய்பவர்கள் கண்டிப்பாக தேசிய அளவில் நடைபெறும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்று அகில இந்திய பார் கவுன்சில் 2010-ம் ஆண்டு புதிய விதிமுறையை கொண்டுவந்தது. வக்கீலாக பதிவு செய்த நாளில் இருந்து 2 ஆண்டுகளுக்குள் இந்த தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். அப்படி இல்லாவிடில் அவர்கள் வக்கீல் தொழிலில் இருந்து நீக்கப்படுவார்கள்.

கடந்த 2014-15-ம் ஆண்டுகளில் வக்கீலாக பதிவு செய்தவர்களில் 1,025 பேர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இதையடுத்து அவர்களை வக்கீல் தொழிலில் இருந்து இடைநீக்கம் செய்து கடந்த 8-ந்தேதி தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் நேரடியாக பி.ஏ., எம்.ஏ. போன்ற பட்டங்களை பெற்று சட்டப்படிப்பை முடித்தவர்களும் வக்கீலாக பதிவு செய்துள்ளனர். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவில் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள் வக்கீலாக பதிவு செய்யமுடியாது என்று கூறியுள்ளது.

இதன் அடிப்படையில் தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் படித்து வக்கீலாக பதிவு செய்தவர்களின் பெயர் விவரங்களை சேகரித்தது. அதில் முதற்கட்டமாக 742 பேரை வக்கீல் தொழிலில் இருந்து இடைநீக்கம் செய்து பார் கவுன்சில் செயலாளர் சி.ராஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். இந்த 742 பேரின் பெயர்களையும் நிரந்தரமாக வக்கீல் தொழிலில் இருந்து ஏன் நீக்கக்கூடாது? என்று விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment

Medical colleges to submit student data for new year

Medical colleges to submit student data for new year DurgeshNandan.Jha@timesofindia.com BANGALURU 10.11.2024  New Delhi : Aiming to rule out...