Sunday, November 12, 2017

நெரிசலில் சிக்கி காயமடைந்த மாணவன் வீட்டில் இருந்து தேர்வு எழுதலாம் மும்பை பல்கலைக்கழகம் அனுமதி



எல்பின்ஸ்டன் ரோடு ரெயில் நிலைய நடைமேம்பால நெரிசலில் சிக்கி காயமடைந்த மாணவன் வீட்டில் இருந்து தேர்வு எழுத மும்பை பல்கலைக்கழகம் அனுமதி வழங்கி உள்ளது.

நவம்பர் 12, 2017, 04:00 AM

மும்பை,

எல்பின்ஸ்டன் ரோடு ரெயில் நிலைய நடைமேம்பால நெரிசலில் சிக்கி காயமடைந்த மாணவன் வீட்டில் இருந்து தேர்வு எழுத மும்பை பல்கலைக்கழகம் அனுமதி வழங்கி உள்ளது.விபத்தில் காயம்

மும்பை எல்பின்ஸ்டன்ரோடு ரெயில்நிலையத்தில் செப்டம்பர் 29–ந் தேதி கூட்ட நெரிசலால் நடந்த விபத்தை யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. இதில் 23 பயணிகள் கூட்டநெரிசலில் சிக்கி பலியானார்கள். மேலும் பலர் காயமடைந்தனர். அதில் ஒருவர் தான் விக்ரோலியை சேர்ந்த ஆகாஷ் (19). அன்றைய தினம் விபத்தில் சிக்கி ஆகாசுக்கு கால் முறிந்தது. இதற்காக அவர் வீட்டில் இருந்து கே.இ.எம். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.வீட்டில் இருந்து எழுத அனுமதி

இந்தநிலையில் மும்பை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு விரைவில் தொடங்க உள்ளது. காயமடைந்து நடக்க முடியாத நிலையில் இருப்பதால் பி.காம். மாணவரான ஆகாஷ் தனது தேர்வை எழுத முடியாமல் போகும் சூழல் ஏற்பட்டது. இந்தநிலையில் அவர் தனது நிலை குறித்து மும்பை பல்கலைக்கழகத்திடம் முறையிட்டார். இதையடுத்து மும்பை பல்கலைக்கழகம் மாணவர் ஆகாஷ் வீட்டில் இருந்தபடியே தேர்வு எழுத அனுமதி வழங்கி உள்ளது.

இதுகுறித்து மும்பை பல்கலைக்கழக தேர்வு துறை இயக்குனர் அர்ஜூன் காதுலே கூறும்போது:– அரிதிலும், அரிதாக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேர்வு அன்று மாணவரின் வீட்டிற்கு பல்கலைக்கழக ஊழியர் ஒருவரும், அவர் வீட்டருகே உள்ள கல்லூரியை சேர்ந்த ஒருவரும் செல்வார்கள். அவர்கள் மாணவரை தேர்வு எழுத வைத்து விடைத்தாளை பெற்று வருவார்கள். மாணவன் ஆகாசுக்கு தேர்வு எழுத கூடுதலாக 1 மணி நேரம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவன் ஆகாசின் தம்பி ரோகித் (11) எல்பின்ஸ்டன் ரோடு ரெயில் நிலைய விபத்தில் சிக்கி பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

MUHS chalks out plan to prevent paper leaks

MUHS chalks out plan to prevent paper leaks  Ranjan.Dasgupta@timesofindia.com 12.01.2025 Nashik : The Maharashtra University of Health Scien...