விரைவான தரிசனத்துக்கு சபரிமலையில் ஏற்பாடு
Added : நவ 22, 2017 22:48
சபரிமலை: சபரிமலையில், பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கேரளாவில், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து, அனைத்துத்துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம், தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் தலைமையில் நேற்று நடந்தது.
தற்போது பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகளுடன், கூடுதல் வசதிகள் ஏற்படுத்தவும், விரைவான தரிசனம் கிடைக்க ஏற்பாடு செய்யவும் இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.ஓட்டல்களில் உணவு பொருட்களை திறந்த நிலையில் வைத்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
பக்தர்கள் எடுத்து வரும் அரிசி, சர்க்கரை போன்ற பொருட்களை ஆழி குண்டம் அருகே உள்ள அரவணை கவுன்டரில் கொடுத்தால் பிரசாதம் அல்லது பாயாசம் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். அரிசி கொடுக்காதவர்கள், 20 ரூபாய் செலுத்தி பெறலாம்.
No comments:
Post a Comment