Thursday, November 23, 2017

குழுவாக செல்ல தனி பஸ்கள் இயக்கம்

Added : நவ 23, 2017 00:08

சபரிமலை: குழுவாக சபரிமலை வந்து செல்ல விரும்பும் பக்தர்களுக்காக தனி பஸ் சேவையை கேரள அரசு போக்குவரத்துக்கழகம் துவங்கியுள்ளது. தமிழகத்தில் மதுரை, பழநி, தென்காசி,
கன்னியாகுமரி, கோவை ஆகிய 5 இடங்களுக்கு இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது.


 இந்த பஸ்களில் 52 பேர் பயணம் செய்யலாம். இதற்கான ஒருவழி கட்டண விபரம்: 

பழநி: 21,550, மதுரை: 19,300 (குமுளி, கம்பம், தேனி வழி), தென்காசி : 12,900 ( புனலுார், செங்கோட்டை வழி) 

கன்னியாகுமரி : 19,860 (பத்தணந்திட்டை, திருவனந்தபுரம் வழி), கோவை: 24,800 ( எருமேலி வழி) கோவை: 26,600 ( பத்தணந்திட்டை வழி )


.இந்த இடங்களில் இருந்து பம்பைக்கு குழுவாக பயணம் செய்ய விரும்புவர்கள் அருகில் உள்ள கேரள அரசு போக்குவரத்துக்கழக டெப்போவில் கட்டணம் செலுத்தினால் பஸ் வந்து பக்தர்களை ஏற்றிச் செல்லும்.கேரளாவில் செங்கன்னுர், கோட்டயம், எர்ணா குளம், திருச்சூர், குருவாயூர், திருவனந்தபுரம், குமுளி, பாலக்காடு, நிலக்கல், சேர்த்தலை, பந்தளம், ஆலப்புழா, ஓச்சிறை, நெய்யாற்றின்கரை ஆகிய இடங்களுக்கும் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024